பதினோரு கெட்டப்பில் கலக்கும் யோகிபாபு!



‘காவி  ஆவி நடுவுல தேவி’ படத்தில்  கதாநாயகனாக ராம்சுந்தர் இதில்  அறிமுகமாகிறார். இவருக்கு ஜோடியாக பிரியங்கா நடிக்கிறார்.
இவர்களுடன் தம்பி ராமையா,  ‘நான் கடவுள்’ ராஜேந்திரன், இமான் அண்ணாச்சி ஆகியோரும் நடிக்கிறார்கள். இந்தப் படத்தை மனோன்ஸ் சினி கம்பைன்ஸ் சார்பில் ஆரூரான் தயாரிக்கிறார். இந்தப் படத்துக்கு பிரபல இயக்குநர் வி.சி.குகநாதன் கதை எழுதியுள்ளார்.

வசனம் எழுதி இயக்கியிருப்பவர் புகழ்மணி.‘‘காதலர்களைச் சேர்த்து வைக்கும் கேரக்டரில் வரும் யோகிபாபு அதற்காக பதினொரு விதமான கெட்டப்புகளில் வந்து நகைச்சுவையை அள்ளித் தெளித்திருக்கிறார்.

‘நான் கடவுள்’ ராஜேந்திரனும், அவருக்குத் துணையாக மலையாள மாந்திரீகனாக இமான் அண்ணாச்சியும் அடிக்கும் லூட்டிகள் நகைச்சுவையில் மேலும் கலக்கும். தம்பி ராமையா வரும் காட்சிகள் அனைத்தும் அதிரடி காமெடியாக இருக்கும். இதன் கிராஃபிக்ஸ் காட்சிகள் பிரமிப்பூட்டும் வகையில் இருக்கும்’’ என்கிறார் இந்தப் படத்தின் கதாசிரியரான வி.சி.குகநாதன்.

- ரா