ஷாமுடன் மோதும் யாஷ்!



கடந்த வருடம் கன்னடத்தில் உருவாகி, தமிழ், தெலுங்கு மட்டுமல்லாது இந்தியிலும் வெளியாகி மிகப்பெரிய வெற்றிபெற்ற படம் ‘கேஜிஎப் சாப்டர் 1’. இந்தப்படம் மூலம் தென்னிந்தியா முழுவதும் ரசிகர்கள் ஏற்றுக்கொள்ளும் ஒரு கதாநாயகனாக மாறினார் யாஷ். இந்த நிலையில் யாஷ் நடிப்பில் தமிழில் உருவாகியுள்ள படம் ‘சூர்யவம்சி’. கதாநாயகியாக ராதிகா பண்டிட் நடித்துள்ளார். முக்கிய வேடத்தில் ஷாம் நடித்துள்ளார். மஞ்சு சினிமாஸ் சார்பில் கே.மஞ்சு தயாரித்துள்ளார்.

‘‘நேர்கொண்ட பார்வை கொண்ட துணிச்சலான இளைஞன் யாஷ், தன் மனதைக் கவர்ந்த ராதிகாவை விரட்டி விரட்டிக் காதலிக்கிறார். ராதிகா யாஷை விரும்பினாலும் அதை வெளியே சொல்ல தயக்கம் காட்டுகிறார். ராதிகாவின் பெற்றோர்கள் தாங்கள் இறப்பதற்கு முன்பு தங்கள் உறவுக்காரப் பையன் ஷாமைத்தான் திருமணம் செய்ய வேண்டும் என சத்தியம் வாங்கி யிருப்பது யாஷிற்கு தெரிய வருகிறது.

ஷாம் ஒரு மிகப்பெரிய டான். அதேசமயம் ராதிகாவுக்காக தன்னை மாற்றிக்கொள்ள நினைப்பவர். இதன்பிறகு என்ன நடக்கிறது என்பதை காதல், காமெடி, ஆக் ஷன் கலந்து சொல்லும் படம்தான் இந்த ‘சூர்யவம்சி’’’ என்கிறார் படத்தின் இயக்குநர் மகேஷ்ராவ்.

- ரா