கிள்ளி பம்பரம் கோலி



மலேசியத் துயரம்!

குடும்பச் சூழல் காரணமாக மலேஷியாவுக்கு வேலைக்குச் செல்கிறார்கள் சில இளைஞர்கள். அங்கு தங்களைப் போலவே குடும்பத்தை கரை சேர்க்க பாடுபட்டுக் கொண்டிருக்கும் நாயகி தீப்தி ஷெட்டியை சந்திக்கிறார்கள். இவர்களை, கோலாலம்பூர் முழுவதையும் தன் கட்டுப்பாட்டில் வைத்திருக்கும் வில்லன் சந்தோஷ் வம்புக்கு இழுக்கிறார். வில்லனின் கோரப்பிடியிலிருந்து அப்பாவி இளைஞர்கள் எப்படி தப்பிக்கிறார்கள் என்பதுதான் படம்.

பிரசாத், நரேஷ், தமிழ் ஆகிய இளைஞர்கள் வேலைக்காக வெளிநாடு செல்லும் இளைஞர்களின் மனநிலையை நன்றாக வெளிப்படுத்தியிருக்கிறார்கள். நாயகி தீப்தி படம் முழுக்க காட்சி யளிக்கிறார். சென்டிமென்ட் காட்சிகளில் உருக வைக்கிறார். கஞ்சா கருப்பு, தலைவாசல் விஜய் ஆகியோர் கதாபாத்திரங்கள் நிறைவு. வில்லனாக வரும் சந்தோஷ் வில்லத்தனத்தில் பின்னியெடுத்திருக்கிறார்.

மலேஷியாவின் அழகை அள்ளி வந்ததற்காகவே ஒளிப்பதிவாளர் நாக கிருஷ்ணாவைப் பாராட்டலாம். பிரசாத் இசையில் பாடல்கள் தாளம் போட வைக்கின்றன. அவரவரிடம் உள்ள திறமைகளை வைத்தே ஜெயிக்கலாம் என்ற கருத்தை இழுத்தடிக்காமல் ரசிக்கும் படியாகச்  சொல்லியிருக்கிறார் இயக்குநர் மனோஹரன்.