மலை போன்ற சிலை!



ரீடர்ஸ் கிளாப்ஸ்!

‘பேராசை பெருநஷ்டம்’ என்று சினிமா ஸ்ட்ரைக்கின் பின்னணியை அலசி ஆராய்ந்து எழுதியுள்ளீர்கள். ஒருவர் மீது மற்றவர் குற்றம் சாட்டி அத்தனை பேருமே அவதிக்கு உள்ளாகும் இந்த ஸ்ட்ரைக் திரைத்துறையினருக்கு தேவைதானா என்பதே ரசிகனின் கவலையான ஆதங்கம்.
- த.சத்தியநாராயணன், அயன்புரம்.

கவர்ச்சி வேட்டைக்காரி சன்னி லியோனின் தென்னாப்பிரிக்க அனுபவங்கள் திரில்லிங்காக இருந்தது.
- எம்.சேவுகப்பெருமாள், பெருமகளூர்.

மலை போன்ற சிலை சாய் அக்‌ஷயாவின் நடுப்பக்க வண்ணப்படம் அபாரம்.  எடுப்பான நாசி, துடிப்பான கண்கள், பவழ இதழ்கள், கச்சிதமான அளவு கொண்ட அவரை  பாரிஸ் நகரத்து சிலை என்று வர்ணித்தது வெகு பொருத்தம்.
- கே.நடராஜன், திருவண்ணாமலை.

‘ஆணுக்கு சிக்ஸ் பேக், பெண்ணுக்கு?’ என்கிற கேள்விக்கு சரோஜாதேவி கொடுத்த பதில் ஆழமானதும், அறிவுபூர்வமானதும் ஆகும். உடற்கட்டை வெளிப்படுத்துவதில் ஆண், பெண் இரு பாலரின் தனித்துவம் குறித்த வரையறைகள் குறித்து நெடுநேரம் யோசித்துக் கொண்டே இருந்தேன்.
- ஏ.பி.எஸ்.ரவீந்திரன், வள்ளியூர்.

புகைச்சலுக்கு பேர் போன திரைத்துறையில் ப்ரியா ஆனந்தும், விசாகா சிங்கும் பின்னிப் பிணைந்த நட்பில் சஞ்சரிப்பது நல்ல விஷயம்தான். ஆனா, ஃபயர் புகையாம பார்த்துக்கணும்.
- கே.கே.பாலசுப்ரமணியன், குனியமுத்தூர்.

மூணாம் பக்கத்துலே மூச்சு முட்டிடிச்சி. அள்ளாத தானியம் இப்படியா குவியும்?
- சங்கீத சரவணன், மயிலாடுதுறை.

மாமியாருக்கு செய்த சத்தியத்துக்காக தன் கணவரை நடிகராக்கி படம் தயாரிக்கும் மனைவி குறித்து அறிந்து ஆச்சரியப்பட்டேன்.
- குந்தவை, தஞ்சாவூர்.