இளையராஜா இசையமைத்த முதல் படம்!



இசைஞானி பவள விழா கொண்டாட்டம்

டைட்டிலைப் பார்த்ததுமே ‘அன்னக்கிளி தானே?’ என்று அத்தனை பேரும் சொல்வீர்கள். அதிகாரபூர்வமாக அதுதான்.ஆனால் -‘அன்னக்கிளி’க்கு நான்கு ஆண்டுகளுக்கு முன்பே தன்னுடைய திறமையை திரையில் பட்டொளி வீசி பறக்கச் செய்தார்.இசையமைப்பாளர் கோவர்த்தனிடம் ‘வரப்பிரசாதம்’ என்கிற படத்தில் உதவியாளராக வேலை பார்த்தார் இளையராஜா.

கோவர்த்தனம் போட்ட டியூன்களுக்கு ஆர்க்கெஸ்ட்ரா இளையராஜாதான் அமைத்தார். அது மட்டுமின்றி படத்தின் பின்னணி இசை மொத்தத்தையும் அவரே செய்திருந்தார். இந்தப் படத்தில் ‘கங்கை நதி ஓரம் ராமன் நடந்தால்’ என்கிற புலமைப்பித்தன் பாட்டு ரொம்பவும் பிரபலம்.

வலம்புரிஜான் எழுதியிருந்த ‘அருகில் இருந்தால் அழகாய் தெரியும்’ பாட்டும் அப்போது ரசிகர்களைக் கவர்ந்தது. 1972ல் இந்தப் படம் வெளியானது.‘வரப்பிரசாதம்’ மூலமாக தமிழர்களுக்கு ஒரு வரப்பிரசாதம் கிடைத்தது.

- சுரேஷ்