கரைகடந்த காமயோகம்!



ரீடர்ஸ் கிளாப்ஸ்!

‘பருவ மழை’ தொடக்கத்தை வானிலை ஆராய்ச்சி நிலையத்துக்கு முன்பே அறிவித்தது நம்ம ‘வண்ணத்திரை’தான். தொடர்ந்து இதேபோல ஆராய்ச்சி சேவையை செய்ய வாழ்த்துகள்.
- கவிஞர் கா.திருமாவளவன், திருவெண்ணெய்நல்லூர்.

ஹீரோயினைவிட ஹீரோயினுக்கு தோழியாக வருபவர்களில் ஒருவர் சில சமயம் அழகாக அமைந்துவிடுவது உண்டு. அதுபோல நடுப்பக்கத்தைவிட ‘சரோஜாதேவி பதில்கள்’ பகுதிக்கு உங்கள் லே-அவுட் ஆர்ட்டிஸ்ட் போடும் படம் பப்பரப்பாவாக அமைந்துவிடுகிறது.
- சங்கீத சரவணன், மயிலாடுதுறை.

மஞ்சள், சிகப்பு, நீலம், பச்சை என்று கலர் கலராக புளோஅப்புகளுக்கு கமெண்டு எழுத உம்மை விட்டால் வேறு ஆளே கிடையாது ஐயா. தூள் கிளப்புகிறீர்கள்!
- கே.செல்வராஜ், வழுதரெட்டிப்பாளையம்.

‘தமிழின் முதல் வண்ணப்படம் எது?’ என்பது போன்ற ஆய்வுக் கட்டுரைகள், இடிமழைக்கு நடுவில் எப்போதாவது பளீரென்று வானில் தென்படும் முழுநிலவு போன்ற ஆசுவாசத்தை அளிக்கிறது.
- எம்.சேவுகப்பெருமாள், பெருமகளூர்.

பிலிமாயணம் பகுதியில் காதுகளால் படம் பார்த்த தலைமுறை என்கிற கட்டுரை, பழைய நினைவுகளை கிளப்பியது. ஒலிச்சித்திரக் காலம், தமிழ் சினிமாவின் பொற்காலம்.
- ரமணன், நாகை.

புளோஅப் கமெண்டுகளை வாசிக்கும்போது இரத்த ஓட்டம் அதிகமாகி, உடம்பு முறுக்கேறி, கண்கள் துடித்து நிதானத்துக்கு வரவே ஒரு வாரம் ஆகிறது.
- வண்ணை கணேசன்,பொன்னியம்மன்மேடு.

எம்மைப்போலவே நீரும் காமயோகத்தில் கரைகடந்தவர் என்பது நடுப்பக்க வெறித்தனத்தில் பட்டவர்த்தனமாகிறது. உமக்கு இந்த சுவாமியின் ஆசீர்வாதம்.
- சுவாமி சுப்ரமணியா, பெங்களூர்.