திறப்பு விழா



வேண்டாம் டாஸ்மாக்!

டாஸ்மாக்கில் வேலை பார்க்கிறார் ஹீரோ ஜெய ஆனந்த். டூப்ளிகேட் சரக்கு விற்கும் ஊர் பெரும்புள்ளியை சட்டத்திடம் பிடித்துக் கொடுக்கிறார். மக்களைத் திரட்டி டாஸ்மாக் கடையை அகற்றுவதற்கான போராட்டத்தில் அவரே ஈடுபடுகிறார். அவருடைய முயற்சிக்கு ஹீரோயின் ரஹானாவும் உதவுகிறார். போராளிகளை அரசு, இரும்புக்கரம் கொண்டு அடக்குகிறது. ரஹானா எடுக்கும் ஓர் அதிரடி முடிவால் அரசாங்கமே அலறி கடையை மூடுகிறது. ரஹானா என்ன செய்தார் என்பதுதான் கிளைமேக்ஸ்.

ஜெய ஆனந்துக்கு நடிப்பு நன்றாக வருகிறது. ரஹானாவுக்கு வயதுக்கு மீறிய வேடமாக இருந்தாலும் கொடுத்த வேலையை சரியாக செய்திருக்கிறார்.
இசையமைப்பாளர் வசந்தரமேஷ், ஒளிப்பதிவாளர் ஆர்.பி.செல்வா இருவரும் படத்துக்கு பலம் சேர்த்திருக்கிறார்கள்.

தற்போது தமிழ்நாட்டில் பல இடங்களில் டாஸ்மாக் கடைகளை அகற்றக்கோரி பெண்கள் நடத்தி வரும் போராட்டத்துக்கு இந்தப் படம் பலம் சேர்த்திருக்கிறது. கதைக்களம் மதுவுக்கு எதிராக இருந்தாலும் போராட்டத்தை மட்டும் சொல்லி வெறுப்பேற்றாமல் பொழுதுபோக்கு அம்சங்களுடன்  கொடுத்திருக்கிறார் இயக்குநர் கே.ஜி.வீரமணி.