செல்போனைக் கண்டு அலறும் நடிகைகள்!



மறைந்த தொப்பி இயக்குநரும், இருட்டிலும் கூலிங் கிளாஸ் அணியும் இயக்குநரும் செல்போன் வைத்துக் கொண்டதில்லை. இப்போது சில நடிகையரும் செல்போனை துறக்கத் தொடங்கியிருக்கிறார்கள்.

ஊதா கலரு ரிப்பன் நடிகையின் பர்சனல் நம்பருக்கு கண்டவர்களும் போன் செய்து ‘தொல்லை’ கொடுப்பதால், இனிமேல் தனக்கு செல்போனே வேண்டாம் என்கிற முடிவுக்கு வந்திருக்கிறாராம்.

இதனால் நடிகையிடம் பேச விரும்பும் இளம் ஹீரோக்களுக்கு தாவு தீருகிறதாம். நடிகையின் அம்மா வழியாகவே நடிகையை தொடர்பு கொள்ள முடியும் என்கிற நிலை ஏற்பட்டிருப்பதால், தேவையற்ற சங்கடங்களைத் தவிர்க்க முடிகிறதாம் ஊதா கலரு ரிப்பனால். இந்த விஷயத்தை கேள்விப்பட்ட மற்ற இளம் நடிகைகளும் இந்த திட்டத்தை அமல்படுத்த முடிவெடுத்திருக்கிறார்களாம்.

- லார்டு கிங்