எங்களுக்கும்தான் அபுக்குன்னு இருக்கு!



ரீடர்ஸ் கிளாப்ஸ்!

லொள்ளுசபா ஜீவாவின் உதட்டை பத்துவாட்டி உறிஞ்சி, சங்கீதாபட் டேமேஜ் செய்தது இருக்கட்டும். அந்தப் படத்தை அப்படியே போட்டு எங்க பிஞ்சு உள்ளங்களை நீங்க டேமேஜ் பண்ணிட்டீங்களே பாஸ்!
- வண்ணை கணேசன், பொன்னியம்மன்மேடு.

டாடா சியரா மாதிரி பளீரென்றிருக்கும் கியாராவின் திறந்த நெஞ்சை பார்த்ததுமே உங்களுக்கு மட்டுமல்ல, எங்களுக்கும்தான் அபுக்குன்னு இருக்கு.
- ரமேஷ், நாமக்கல்.

சண்டைக்கோழிகள் விஷாலுக்கும், லிங்குசாமிக்கும் சமாதானம் என்கிற நற்செய்தியைச் சொல்லி எங்க வயிற்றில் பாலை வார்த்த ‘வண்ணத்திரை’க்கு நன்றி.
- அ.காஜா மைதீன், பழனி

நகர ஒன்றிய புரட்சித்தளபதி விஷால் தலைமை ரசிகர்கள் நற்பணி இயக்கம்.நடுப்பக்க சன்னி லியோன் படத்தில் பொங்கியது அலை மட்டுமல்ல.
- ஏ.பி.எஸ்.ரவீந்திரன், வள்ளியூர்.

வெற்றி கண்டவர், வெற்றியை எட்டாதவர் என்கிற பாகுபாடெல்லாம் காட்டாமல் நூற்றி பதினோரு வாரங்களாக திரையிசை வித்தகர்களின் திறமைகளைத் தோள்தட்டி பாராட்டி வலம்வந்த ‘பாட்டுச்சாலை’ முடிவுற்றது, நெடுநாள் நண்பனைப் பிரிந்த வலியை ஏற்படுத்துகிறது. தொடர் எழுதிய நெல்லை பாரதியைப் பாராட்ட வார்த்தைகள் இல்லை.
- எஸ்.அர்ஷத் ஃபயாஸ், குடியாத்தம்.

சரோஜாதேவியின் மடிப்பும், துடிப்பும் வாராவாரம் எங்கள் பல்ஸ் ரேட்டை அதிகரித்துக்கொண்டே செல்கிறது.
- கவிஞர் கா.திருமாவளவன், திருவெண்ணெய்நல்லூர்.

‘கககபோ’, ‘அட்ரா மச்சான் விசிலு’ மாதிரி சிறுபடங்கள் வெளிவந்த சுவடே தெரியாமல் இருக்க, யாருமே இல்லாத டீக்கடையில் யாருக்கோ டீ ஆத்துற கணக்காக கடமையே என்று ‘வண்ணத்திரை’ மட்டும்தான் விமர்சனம் எழுதி லோ பட்ஜெட் படங்களை ஆதரிக்கிறது. வாழ்த்துகள்.
- குந்தவை, தஞ்சாவூர்.