மல்லாந்தார் மலாய்க்கா!



சல்மான் கான் நடித்த ‘சுல்தான்’ வசூல் பிரமாதம். உலகம் முழுக்க 500 கோடி ரூபாயை வாரிச் சுருட்டியுள்ளது. ஆனாலும் அமீர்கானின் ‘பீகே’ வசூலான 700 கோடியை எட்டுவது கஷ்டம்தான் என்கிறார்கள்.

அடுத்த ஆண்டு பிப்ரவரியில் ஷாருக்கானின் ‘ரயீஸ்’ வெளியாகிறது. அதே நாளில் ஷாருக்குக்கு போட்டியாக ஹிரித்திக் ரோஷனும் தன்னுடைய ‘காபில்’ படம் மூலம் களமிறங்குகிறார்.

கரிஷ்மா கபூர் கொடுத்த மிட்நைட் பார்ட்டியில் கவர்ச்சி நடிகை மலாய்க்கா மல்லாந்துவிட்டாராம். தனது காரிலேயே பாதுகாப்பாக அவரை வீட்டுக்கு அனுப்பினாராம் கரிஷ்மா.‘மொஹஞ்சதரோ’ படத்தில் தன்னோடு நடித்த பூஜா ஹெக்டேவை பாராட்டித் தள்ளிக் கொண்டிருக்கிறாராம் ஹிரித்திக் ரோஷன். பூஜா, செம பூரிப்பில் இருக்கிறார்.

‘எவனோ ஒருவன்’ நிஷிகாந்த் காமத் இயக்கத்தில் இர்பான் கான் நடிப்பில் வெளியான ‘மதாரி’, பாக்ஸ் ஆபீஸில் வேலைக்கு ஆகவில்லை.சமீபத்தில் சன்னி லியோன் மீது காவல்துறை வழக்குப் பதிவு செய்திருக்கிறது. ‘ஏ’டாகூடமான செக்‌ஷனில் அல்ல. தேசிய கீதத்தை தவறாகப் பாடிவிட்டாராம்.

கெளரிஷிண்டே இயக்கும் ‘டியர் ஜிந்தகி’ படத்தை தயாரிப்பதோடு, அதில் கவுரவ வேடத்திலும் நடிக்கிறார் ஷாருக்கான். இந்தப் படத்தின் கதை ஹீரோயின் ஆலியாபட்டை சுற்றியே நகருமாம்.

“இன்னுமா உனக்கு பேஸ்புக்கில் அக்கவுண்டு இல்லை?” என்று சமீபத்தில் தன்னுடைய மாஜி காதலி கேத்ரினா கைபிடம் கேட்டாராம் சல்மான். இதையடுத்து பேஸ்புக் ஜோதியில் தானும் இணைய முடிவெடுத்திருக்கிறாராம் கேத்ரினா.நம்மூர் ‘அக்னி நட்சத்திரம்’ இந்தியில் ரீமேக் ஆகிறது. கார்த்திக் வேடத்தில் தனுஷ் நடிப்பதாகப் பேச்சு.கிட்டத்தட்ட உடைந்துவிட்டது என்று நினைத்த விராத் கோலி - அனுஷ்கா சர்மா காதல் மீண்டும் இறுகியதற்கு சல்மான்கான்தான் காரணமாம்.

- ஜியா