டெபாசிட் காலி!



ரீடர்ஸ் கிளாப்ஸ்!

இருமுகனின் பலமுகங்களைக் காட்டிய ‘டைம் மெஷின்’ ஜோராக ரசிக்க வைத்தது.
- சங்கீத சரவணன், மயிலாடுதுறை.

கோபிகா, வாக்குறுதி மீறாத நடிகைதான். அதற்காக, நைசாக எங்கள் தலைவி நயன்தாராவை வம்புக்கு இழுக்க வேண்டுமா? வாக்குறுதியைக் காப்பாற்றுகிறேன் என்கிற பெயரில் நயன் இழுத்துப் போர்த்தி நடிக்க ஆரம்பித்தால் நாங்கள் எல்லாம் என்ன கதிக்கு ஆளாவது?
- வண்ணை கணேசன், பொன்னியம்மன்மேடு.

ஷகீலாவின் வாழ்க்கை படமாகிறது என்கிற நற்செய்தியை வெளியிட்டு அவரது தீவிர விசிறிகளான எங்களுக்கு மலரும் நினைவுகளை விசிறி விட்டிருக்கிறீர்கள்.
- த.சத்தியநாராயணன், அயன்புரம்.

நடுப்பக்க புவனேஸ்வரிக்கு எங்க ஓட்டு. எதிர்த்து நிற்கும் அத்தனை பேருக்கும் டெபாசிட் காலி.
- ச.கார்த்திக், சிங்காநல்லூர்.

காதலிப்பவன்தான் எப்போதும் வேலை செய்யத் தயாராக இருக்க வேண்டும் என்கிற சரோஜாதேவியின் கருத்து ஆழமானதாகவும், அர்த்தமுள்ளதாகவும் அமைந்திருந்தது. அந்த பதிலை வாசித்ததில் இருந்து கடுமையாக சிந்தனைவயப்பட்டிருக்கிறேன்.
- எஸ்.அர்ஷத்ஃபயாஸ், குடியாத்தம்.

தர்ப்பூசணி உடல் உஷ்ணத்தை தணிக்கும் என்பது மாதிரி உங்கள் மருத்துவக் குறிப்புகளெல்லாம் சரிதான். ஆனால், அதற்கு நீங்கள் போடும் ஸ்டில்களால் உடம்பு அனலாய்க் கொதிக்குதே. என்ன செய்ய?
- ராமஜெயம், மயிலாப்பூர்.

‘ஓல்டு ஈஸ் கோல்டு’ பகுதியில் மந்திராவின் படத்தைப் பார்த்தபிறகுதான் நானும் ஓல்டு ஆகிவிட்டதே புரிகிறது.
- குந்தவை, தஞ்சாவூர்.