நடிகை, பாடகி, இசையமைப்பாளர், துணை தயாரிப்பாளர், உலக நாயகனின் வாரிசு என பன்முகங்கள் கொண்ட ஸ்ருதிஹாசன், பிற்காலத்தில் படம் இயக்கவும் தன்னை தயார்ப்படுத்தி வருகிறார்.
உளவியல் படித்துள்ளதால், ஒருவரைப் பார்த்தவுடனே ஓரளவு அவரது குணாதி சயங்களைக் கவனித்து விடும் ஸ்ருதி, யாரிடமும் அவ்வளவு சீக்கிரத்தில் பெர்சனல் செல் நம்பரை கொடுக்க மாட்டார்.
வீண் ஜம்பத்துக்காக தன்னிடம் ஆங்கிலத்தில் யாராவது பேசினால், ‘நான் தமிழ்ப் பொண்ணுங்க. தமிழ்லயே பேசுங்க’ என்று சொல்லி, எதிரில் உள்ளவர்களை அதிர வைப்பார்.
பேட்டி கொடுப்பது ஸ்ருதிக்குப் பிடிக்காத விஷயம். அவரைப் பற்றிய தகவல்கள் கேட்டால், ‘எல்லா விவரமும் ‘நெட்’ல இருக்கு. அதைப் படிச்சுக்கோங்க’ என்பார்.
நடிப்பு சம்பந்தமாக கமலிடம் டிப்ஸ் கேட்பார். ஆனால், கதை கேட்பது, கால்ஷீட் தருவது, சம்பளம் பேசுவது எல்லாம் சொந்த முடிவுதான்.
- தேவராஜ்