தெரிஞ்ச சினிமா தெரியாத விஷயம்





உதிரிபூக்கள்’, ‘நிறம் மாறாத பூக்கள்’, ‘பசி’ உட்பட ஏராளமான படங்களில் கதாநாயகனாக நடித்த விஜயன் இயக்கிய ஒரே படம், ‘புதிய ஸ்வரங்கள்’. இளையராஜா இசையமைத்த இந்தப் படம் இன்று வரை வெளிவரவில்லை...

ரஜினிகாந்தின் மெகா ஹிட் படமான ‘பாட்ஷா’வை முதலில் ஆர்.கே.செல்வமணிதான் இயக்குவதாக இருந்தது. செல்வமணியை அழைத்த ரஜினி, ‘வேறு எந்த கமிட்மென்டையும் எடுத்துக் கொள்ள வேண்டாம்; திரைக்கதை வேலை முடிந்ததும் ஷூட்டிங் போகலாம்’ என்று கூறியுள்ளார். இதை கேள்விப்பட்ட விஜயகாந்த் தரப்பினர், செல்வமணிக்கும் தெரியாமல் ஒரு காரியம் செய்தனர். அதாவது, விஜயகாந்த் நடிக்கும் படத்தை செல்வமணி இயக்குவதாக செய்தித்தாள்களில் விளம்பரம் கொடுத்தனர். இதை கண்டு அப்செட் ஆன ரஜினி, செல்வமணியை நீக்கிவிட்டு சுரேஷ் கிருஷ்ணாவை இயக்குநராக்கினார்.

எடுக்கபடாமலே நின்று போன தெலுங்கு படம், லோ பட்ஜெட் தெலுங்கு படம் ஒன்று என்று அஜித் தடுமாறி கொண்டிருந்த நேரத்தில் ‘அமராவதி’ படத்தின் மூலம் அவருக்கு வெளிச்சம் கிடைக்க செய்தவர் இயக்குநர் செல்வா. செல்வாவின் திருமணத்தில் அஜித் கலந்து கொண்ட போது எடுத்த படம் இது...



ரஜினியின் ‘தம்பிக்கு எந்த ஊரு
’ படத்துக்கு முதலில் வைத்த பெயர் என்ன தெரியுமா? ‘நானே ராஜா... நீயே ராணி’. இந்த பெயர் நன்றாக இல்லை என பலரும் கருத்து தெரிவிக்கவே, ‘தம்பிக்கு எந்த ஊரு’ என்று மாற்றி இருக்கிறார்கள். ஆனால், படத்தின் இசைதட்டுக்களில் ‘நானே ராஜா... நீயே ராணி’ என்றுதான் இருக்கிறது. இங்கு வெளியாகியிருக்கும் படம் அதைதான் சுட்டிக் காட்டுகிறது. கூடுதல் தகவல், இலங்கை வானொலியில் கடைசி வரை இந்த படத்தின் பெயரை ‘நானே ராஜா... நீயே ராணி’ என்றுதான் குறிப்பிட்டிருக்கிறார்கள். காரணம், ‘தம்பிக்கு எந்த ஊரு’ என்று கூறினால், அது பிரபாகரனை விமர்சனம் செய்வது போல் ஆகிவிடும் என்று கருதியிருக்கிறார்கள்!


பதினாறு வயதினிலே’ தயாரிப்பாளர் ராஜ்கண்ணு, ஒரு லாரி ஓட்டுனர் என்பது அனைவருக்கும் தெரியும். ஆனால், தெரியாத விஷயம் ஒன்று இருக்கிறது. படம் எடுக்க வேண்டும் என்ற தீராத கனவுடன் இருந்த அவரிடம் வந்த பாரதிராஜா, நாலரை லட்சம் ரூபாய் இருந்தால் ஒரு படம் பண்ணி தருகிறேன் என்று சொல்லியிருக்கிறார். ஆனால், அந்த பணத்துக்குள் படம் எடுக்க முடியாததால் தனது லாரியை விற்று படத்தை முடித்திருக்கிறார் ராஜ்கண்ணு. படத்தை வாங்க எந்த விநியோகஸ்தரும் வரவில்லை. எனவே, ஆறு ப்ரிண்ட்களுடன் தமிழகம் முழுவதும் தானே வெளியிட்டிருக்கிறார். முதல் நான்கு வாரங்கள் படம் ஓடவே இல்லை. ஆனால், அதன் பின் படம் பம்பர் ஹிட். இதனால் வருமான வரித்துறை ரெய்டுகளுக்கு பயந்து, ராஜ்கண்ணு தலைமறைவாகி விட்டாராம். படத்தின் ரீமேக் உரிமையை வாங்க பல மொழிகளை சேர்ந்த பிரபல தயாரிப்பாளர்கள் வலை வீசி அவரை தேடியிருக்கிறார்கள். கடைசியில் மருத்துவமனையில் அட்மிட் ஆகியிருந்த ராஜ்கண்ணுவை பிடித்து ரீமேக் உரிமையை வாங்கி இருக்கிறார்கள்!