ஓஹோ... அப்படியா சங்கதி





ஜிம்கேரி நடித்த ‘ட்ரூமேன் ஷோ’ ஹாலிவுட் படம் நினைவில் இருக்கிறதா? ஒரு மனிதனுக்கே தெரியாமல் அவனது ஒருநாள் வாழ்க்கையை ரியாலிட்டி ஷோ ஆக சின்னத்திரையில் பதிவு செய்து ஒளிபரப்புவார்கள். படத்துக்காக எழுதப்பட்ட இந்தக் கதை ரியல் ஆகவே நடக்கப் போகிறது. சர்வதேச சேனல் ஒன்று இந்த கான்செப்டை அடிப்படையாக வைத்து ஒரு ரியாலிட்டி ஷோவை தயாரிக்க முடிவு செய்திருக்கிறது. அதில் தோன்றப் போகிறவர், மல்லிகா ஷெராவத். ஜாக்கி சானில் ஆரம்பித்து உலக நாயகன் கமல் வரை அனைவரது ‘நெஞ்சத்தையும் பெரிய அளவில்’ கவர்ந்த இவரது ஒருநாள் வாழ்க்கையை டிவியில் ஒளிபரப்பப் போகிறார்கள்.