தலைப்பை படித்துவிட்டு நமுட்டு சிரிப்பு சிரிக்கலாம். காதில் பூ சுற்றுவதாகவும் நினைக்கலாம். நல்ல ‘கதை’ என கேலியும் செய்யலாம். சென்னையிலேயே ஏராளமான நட்சத்திர விடுதிகள் இருக்கின்றன. அண்ணா சாலையில் ஆரம்பித்து அடையார், வடபழனி வரை நீக்கமற ஸ்டார் ஹோட்டல்ஸ் நிறைந்திருக்கின்றன. இது தவிர தெரிந்தும், தெரியாமலும் ஏராளமான அபார்ட்மெண்ட்டை நட்சத்திரங்கள் வாங்கிக் குவித்திருக்கிறார்கள். அப்படியிருக்க இங்கெல்லாம் விட்டுவிட்டு திருப்பூரா... என கேள்வி முளைப்பது நியாயம்தான். சொல்ல வரும் தகவலும் டுபாக்கூர் என முடிவு கட்டுவதும் சரிதான். ஆனால், அடுத்தடுத்து வரும் அடுக்கடுக்கான செய்திகள் திருப்பூரை மையமாக வைத்தே வருகின்றன. அத்துடன் கடந்த சில மாதங்களில் திடீர் திடீரென்று பல படங்களில் நடிகைகள் ஒப்பந்தமானது திருப்பூரில்தான் என முழம் நீளத்துக்கு பட்டியல் ஒன்றை வாசித்தபடி அடித்துச் சொல்கிறார் புரொடக்ஷன் புண்ணியகோடி.
தலையைச் சுற்றி மூக்கை தொடும் விதமாக பு.புண்ணியகோடி சொல்ல வருவது இதைதான்... தென்னக மொழிகளின் ‘டிஸ்கஷன்’ தாயகமாக திருப்பூர் மாறி வருகிறது. இது எந்தளவுக்கு உண்மை? இதற்கும் புண்ணியகோடியிடம் பதில் இருக்கிறது. ‘ஒரு படத்தின் ஆரம்பம் அல்லது படப்பிடிப்பு நேரங்களில் சில நடிகைகள் சம்பந்தப்பட்ட கதாநாயகன் அல்லது தயாரிப்பாளர் அல்லது இயக்குநருடன் ‘அப்படி இப்படி’ என நடந்து கொள்வது வழக்கம்தான். ஆனால், இவையனைத்தும் படம் தொடங்கிய பிறகு. ஆனால், நான் சொல்ல வருவது படம் ஆரம்பிப்பதற்கு முன்பு...’ என்றவர் ஆதியோடு அந்தமாக இதுகுறித்து விளக்க ஆரம்பித்தார்.
‘எந்த தென்னக மொழிகளில் ஒரு நடிகை அறிமுகமானாலும் மற்ற மொழிப் படங்களிலும் காலூன்றவே விரும்புவார்கள். இதற்காக அந்தந்த மொழியில் யாரேனும் ஒருவரை தேர்ந்தெடுத்து அவர்கள் வழியாக வாய்ப்பை தேடுவார்கள். இந்த பிராசஸ் சற்று நீளமாக இருக்கிறது. மாதக் கணக்கிலும் ஆகிறது. இதை தவிர்க்க என்ன செய்யலாம் என்று அவர்கள் யோசித்தபோதுதான் ‘கெட் டு கெதர்’ என்ற கான்செப்ட் வரப்பிரசாதமாக அமைந்தது.
தொடர் படப்பிடிப்பு, தொடர் ஆக்ஷன் காட்சிகள், தொடர் நடன அசைவுகள் என விடாமல் நடிக்கும் நட்சத்திரங்களுக்கு ரிலாக்ஸ் தேவைப்படுகிறது. இதற்காக சம்பந்தப்பட்ட நகரங்களில் உள்ள பப் அல்லது இரவு விடுதிக்கு செல்கிறார்கள். இவை மீடியாக்களின் பார்வையில் பட்டு வெளிச்சத்துக்கு வந்து விடுகிறது. இதனை தவிர்க்க பண்ணை வீடுகளில் கமுக்கமாக பார்ட்டி நடத்திப் பார்த்தார்கள். அதையும் ஊடகங்கள் மோப்பம் பிடித்துவிட்டன.
எனவே பெரிய நகரங்களின் புறநகர்ப் பகுதிகளில் உள்ள பண்ணை வீடுகளை தவிர்த்து விட்டு சிறு நகரங்களில் பார்ட்டி நடத்துவது என்று தீர்மானித்தார்கள். அப்போது அவர்கள் பார்வையில் பட்ட இடம்தான் திருப்பூர். ஆந்திராவை சேர்ந்த ரவியான மாஸ் நடிகர் ஒருவர்தான் இந்த இடத்தை முதலில் கண்டுபிடித்தார். புற்றீசல் போல் திருப்பூரில் உருவாகி வரும் பண்ணை வீடுகளில் தன் நட்சத்திர நண்பர்களுக்கு பார்ட்டி வைத்தார். நடிகைகளும் இதில் கலந்து கொண்டார்கள். மீடியாக்களுக்கு தெரியாமல், வெளிநாடுகளுக்கும் பணம் செலவழித்து செல்லாமல், வேறு மாநிலத்தில் சற்றே ஒதுக்குப்புறமாக உள்ள இடத்தில் எந்த பயமும் இல்லாமல் ஒன்று கூடி ஜாலியாக இருந்தார்கள். அந்த பார்ட்டியில் பங்கேற்ற நடிகைகள் ஆன் தி ஸ்பாட் அங்கு வந்த நடிகர்களின் அடுத்தப் படங்களில் ஜோடி சேர ஒப்பந்தமானார்கள்.
எதேச்சையாக நடந்த இந்த பார்ட்டி கை மேல் பலன் அளிக்கவே இப்போது மாதத்துக்கு ஒன்று அல்லது மூன்று மாதங்களுக்கு இருமுறை என ‘டிஸ்கஷன்’ நடக்கிறது. ரிலே ரேஸ் போல நடிகர்கள் இந்த மேளாவை நடத்துகிறார்கள். தென்னிந்திய நடிகர்கள் அனைவரும் இதில் பங்கேற்கிறார்கள். புதிது புதிதாக வரும் நடிகைகளுக்கு அழைப்பு விடுக்கிறார்கள். அப்படித்தான் ஈசிஆர் ரோடு புகழ் நடிகைக்கு தம் கட்டும் தெலுங்குப் பட வாய்ப்பு சில நிமிடங்களில் கிடைத்தது. பிறகு...’ என சில நடிகைகள் இப்போது நடித்து வரும் தமிழ், தெலுங்கு, மலையாள, கன்னடப் படங்களின் லிஸ்டை படிக்க ஆரம்பித்தார்... தலைசுற்ற ஆரம்பித்தது. (படத்தில் இருப்பவர் நடிகை ரம்யா கவுத்லா. அவருக்கும் இந்தச் செய்திக்கும் தொடர்பில்லை)