தவலை வடை



என்னென்ன தேவை?

துவரம் பருப்பு - 1/4 கப்,
உளுத்தம்பருப்பு - 1/4 கப்,
கடலைப்பருப்பு - 1/4 கப்,
பயத்தம்பருப்பு - 1/4 கப்,
அரிசி - 1/4 கப்,
பச்சைமிளகாய் - 1,
இஞ்சி - 1/4 இன்ச் துண்டு,
பொடியாக நறுக்கிய தேங்காய்த்துண்டுகள் - 3 டீஸ்பூன்,
கறிவேப்பிலை - 1 ஆர்க்கு,
கொத்தமல்லி - சிறிது,
வெங்காயம் - 1,
உப்பு - தேவையான அளவு,
எண்ணெய் - பொரிக்க.

தாளிக்க...

எண்ணெய் - 1/2 டீஸ்பூன்,
கடுகு - 1/2 டீஸ்பூன்,
கறிவேப்பிலை - 1/2 ஆர்க்கு.

எப்படிச் செய்வது?


அரிசி, பருப்பு வகைகளை மிளகாயுடன் ஊற வைத்து கொர கொரவென்று அரைத்து அதில் பொடியாக அரிந்த வெங்காயம், தேங்காய், கறிவேப்பிலை, கொத்தமல்லி, இஞ்சி, பச்சைமிளகாய், உப்பு சேர்த்து கலக்கவும். தாளிக்க சொன்ன பொருட்களை தாளித்து மாவில் கலக்கவும். எண்ணெயை சூடாக்கி மாவுகளை வடைகளாக தட்டி பொரித்து எடுத்து சூடாக சட்னியுடன் பரிமாறவும்.