சோயா தட்டை



என்னென்ன தேவை?

சோயா - 1 கப்,
உளுத்தம்பருப்பு - 2 டீஸ்பூன்,
வெள்ளை எள் - 1/2 டீஸ்பூன்,
வேர்க்கடலை - 2 டீஸ்பூன்,
உப்பு - தேவையான அளவு,
பெருங்காயம் - 1/4 டீஸ்பூன்,
மிளகாய்த்தூள் - 1/2 டீஸ்பூன்,
வெண்ணெய் - 1 டீஸ்பூன்,
கறிவேப்பிலை - 1 ஆர்க்கு,
எண்ணெய் - பொரிக்க.

எப்படிச் செய்வது?

சோயாவை வறுத்து மிக்ஸியில் பொடி செய்யவும். நிறைய செய்வதானால் மிஷினில் கொடுக்கலாம். உளுத்தம்பருப்பை கடாயில் போட்டு பொன்னிறமாகும் வரை வறுத்து பொடித்து வைத்துக் கொள்ளவும். ஓர் அகண்ட பாத்திரத்தில் சோயா மாவு, உளுந்து மாவு, உப்பு, பெருங்காயம், மிளகாய்த்தூள், வெள்ளை எள், வேர்க்கடலை, வெண்ணெய், கறிவேப்பிலை சேர்த்து சிறிது தண்ணீர் சேர்த்து பிசையவும். கடாயில் எண்ணெயை சூடாக்கி மாவை சிறு உருண்டைகளாக தட்டி, எண்ணெயில் பொன்னிறமாகும் வரை பொரித்தெடுக்கவும்.