பாலக் சன்னா



என்னென்ன தேவை?

வெள்ளை கொண்டைக்கடலை - 1/2 கப்,
பாலக்கீரை - 1 கட்டு,
தக்காளி - 1,
வெங்காயம் - 1,
சிவப்பு மிளகாய் தூள் - 1/2 டீஸ்பூன்,
மஞ்சள் தூள் - 1/2 டீஸ்பூன்,
கரம்மசாலா தூள்- 1/2 டீஸ்பூன்,
எண்ணெய் - 1 டீஸ்பூன்,
சீரகம் - 1/4 டீஸ்பூன்,
உப்பு - தேவைக்கு,
கசூரிேமத்தி (காய்ந்த வெந்தயக்கீரை) - 1/2 டீஸ்பூன்,
கொத்தமல்லி - அலங்கரிக்க,
இஞ்சி - சிறு துண்டு,
பச்சைமிளகாய் - 1.

எப்படிச் செய்வது?

வெள்ளை கொண்டைக்கடலையை முதல் நாள் இரவே ஊற வைக்கவும். மறுநாள் குக்கரில் 3 விசில் விட்டு வேக விடவும். மிக்ஸியில் தக்காளி, இஞ்சி துண்டு, பச்சை மிளகாய் சேர்த்து அரைத்து வைக்கவும். ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி சீரகம் வெடித்தவுடன் பொடியாக நறுக்கிய வெங்காயத்தை சேர்த்து வதங்கியவுடன் தக்காளி விழுதை சேர்க்கவும். அதில் மிளகாய் தூள், மஞ்சள் தூள் மற்றும் கரம்மசாலா தூள் சேர்த்து எண்ணெய் பிரிந்து வரும் வரை வதக்கவும். பாலக் கீரையை கழுவி பொடியாக அரிந்து தக்காளி கலவையில் சேர்க்கவும். சிறிது தண்ணீர் சேர்த்து 5 நிமிடம் வேக விடவும். அதில் வேக வைத்த கொண்டைக்கடலை, உப்பு சேர்த்து நன்கு கலந்து விடவும். கசூரிமேத்தி மற்றும் கொத்தமல்லித் தழை சேர்த்து கிளறி இறக்கவும். சப்பாத்தி, பூரிக்கு ஏற்ற சைட் டிஷ்.