பஞ்சரத்ன தோசை



என்னென்ன தேவை?

துவரம் பருப்பு - 1/4 கப்,
கடலைப்பருப்பு - 1/4 கப்,
பயத்தம்பருப்பு - 1/4 கப்,
உளுத்தம்பருப்பு - 1/4 கப்,
பொட்டுக்கடலை -1/4 கப்,
அரிசி - 2 கப்,
உப்பு, எண்ணெய் - தேவையான அளவு.

எப்படிச் செய்வது?

பருப்பு வகைகள் மற்றும் அரிசியை தனித்தனியே ஊற வைக்கவும். 4 மணி நேரம் ஊறிய பின் அனைத்தையும் மிக்ஸியில் நன்கு அரைக்கவும். உப்பு சேர்த்து கரைத்து 8 மணி நேரம் புளிக்க விடவும். தோசை மாவு கெட்டியாக இருந்தால் சிறிது தண்ணீர் சேர்க்கலாம். தோசைக்கல்லில் சிறிது எண்ணெய் விட்டு மாவினால் தோசை வார்க்கவும். தோசை நன்றாக பொன்னிறமானதும் மறுபுறம் திருப்பி எடுக்கவும். சூடாக சாம்பார், சட்னியுடன் பரிமாறவும்.