தோழி சாய்ஸ்
அம்மா-பெண் ஸ்பெஷல்
அவசர வாழ்க்கையில் எதிர்பாராவிதமாக கொரோனா குறுக்கிட்டு நம்மை வீட்டில் அடைத்துவிட்டது. ஒரு பக்கம் இது பொருளாதார அடிப்படையில் வீழ்ச்சி என்றாலும், இன்னொரு பக்கம் இத்தனை வருஷ காலமாக இல்லாத வகையில் அனைவரும் ஒரே குடும்பமாக இருக்க மிகப்பெரிய வாய்ப்பு எனலாம். இந்நிலையில் அம்மா- பெண் இந்த காம்போவை அடித்துக்கொள்ளவே முடியாது. வீட்டில் இருக்கிறோம் என்றாலே வெறும் நைட்டி மட்டும்தானா? இதோ ஜாலியான அம்மா- பெண் காம்போக்களை உடுத்தி வாரத்தில் ஒரு நாள் செல்ஃபிகளை க்ளிக்கலாமே!
நாங்கள் இருவருமே ஃபிட் எனில் மாடர்ன் லுக்கில் மிரட்டலாம். கருப்பு நிற ஜீன் அல்லது வெள்ளை நிற கணுக்கால் நீள கிராப் பேன்ட், ¾ லெக்கிங்ஸ் என எதனுடனும் மேட்ச் செய்யலாம். பேபிக்கு அப்படியே அணியலாம். அம்மா- பெண் டாப், கவுன் காம்போ புராடெக்ட் கோட்: Violet front slit long knitted top for mom daughter https://bonorganik.in/ விலை: ரூ.1899



ஷாலினி நியூட்டன்
|