வாசகர் பகுதி



முடியினை அடர்த்தியாக்கும் செம்பருத்தி!

*பெரும்பாலான பெண்களுக்கு முடி உதிருதல் என்பது பெரும் பிரச்னையாக உள்ளது. தலையில் உள்ள சூடு காரணமாகவும், சிலருக்கு முடி உதிரும். அவ்வாறானவர்கள் வாரத்தில் ஒருநாள் மருதாணி இலையை வைத்து அரைத்து தலையில் தேய்த்துக் குளிக்கலாம்.

*வெந்தயக்கீரை அல்லது வெந்தயத்தை ஊற வைத்து அரைத்தும் தலையில் தேய்த்துக் குளிக்கலாம். வெந்தயத்துடன் கடலைப்பருப்பை சேர்த்து அரைத்து குளிப்பதும் நல்ல பலன் தரும்.

*வாரத்திற்கு இரண்டுமுறை எண்ணெய் தேய்த்துக் குளிப்பதால், உடல் உஷ்ணம் மற்றும் தலையில் அழுக்கு சேர்வது
ஆகியவை கட்டுப்படும்.

*செம்பருத்தி பூ இதழ்களை வெயிலில் நன்கு காய வைத்து, அவற்றைப் பொடி செய்து, தேங்காய் எண்ணெயில் ஊற வைத்து, தலையில் தேய்த்து வந்தால் முடி அடர்த்தியாக வளரும்.

*ஊட்டச்சத்து காரணமாகவும், முடி உதிர்தல் பிரச்னை ஏற்படலாம். எனவே பழங்கள், காய்கறிகள், கீரைகள், பருப்பு வகைகள் ஆகியவற்றை அதிகளவில் உணவில் சேர்க்க வேண்டும்.

*கசகசாவைப் பாலில் ஊற வைத்து, அரைத்து, பாசிப்பருப்பு மாவைக் கலந்து தலைக்குத் தேய்த்து குளித்தால், முடி உதிருதல் நிற்கும்.

செக்கில் இருக்கு தேக நலம்

‘வைத்தியனுக்குக் கொடுப்பதைவிட வாணிகனுக்குக் கொடு’ என்பது பழமொழி.

*சுத்தமான செக்கு எண்ணெயை பயன்படுத்தினால் உடலை  ஆரோக்கியமாக வைத்துக்கொள்ள முடியும். எந்தவொரு நோயையும் அண்ட விடாது.

*செக்கு எண்ணையில் நம் உடலுக்கு தேவையான இரும்புச்சத்து, துத்தநாகம், மெக்னீசியம், செம்பு, கால்சியம் ஆகிய சத்துக்கள் உள்ளன. இதனால் நம் கை, கால்களில் உள்ள மூட்டுகள் வலுவடையும்.

*செக்கு மூலம் தயாரிக்கப்படும் கடலை எண்ணெயை சமையலுக்கு பயன்படுத்தினால், உடலில் உள்ள தேவையற்ற கொழுப்புகள் குறையும்.

*செக்கில் ஆட்டப்பட்ட தேங்காய் எண்ணெய் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும்.

*விளக்கெண்ணெய் முதுமையை தாமதப்படுத்தும். மேலும் மாதவிலக்கு போன்ற பிரச்னைகளை போக்கக்கூடிய திறன் இதற்குள்ளது.

 - இல.வள்ளிமயில், மதுரை.