வாசகர் பகுதிகவர்ச்சி தரும் நக அழகு

கடவுள் பெண்களின் ஒவ்வொரு உடல் உறுப்பிலும் ஒவ்வொரு விதமான அழகைப் படைத்திருக்கிறான். பெண்களின் கைவிரல்களும், விரல்களில் அமைந்துள்ள நகங்களும் பெண்களுக்குத் தனித்து ஒரு எழிலையும், கவர்ச்சியையும் அளிக்கின்றன.

* நகங்களை அழகுபடுத்துவதற்கான முதல் நிலை அவற்றை சீராக வெட்டவேண்டும்.

* நீண்ட விரல்களைப் பெற்ற பெண்கள், நகங்களை விரல்களோடு ஒட்டியிருக்கும் வண்ணம் வட்ட வடிவமாக வெட்டிவிட்டால்
அழகாக இருக்கும்.

* குட்டையான விரல்களைக் கொண்ட பெண்கள் கைவிரல்களைவிடச் சற்று நீளமாகக் கூம்பிய வடிவில் நகங்களை வெட்டி விட்டால் அமைப்பாக இருக்கும்.

*  குட்டையான விரல் அமைப்பினைப் பெற்ற பெண்கள் நகங்களின் மையப் பகுதியை உள்ளிறங்கும் விதமாகச் சந்திர பிம்பம்போல வெட்டி விட்டால் அழகாக, கவர்ச்சியாக இருக்கும்.

* பாதாம் எண்ணெயை விரல் நகங்களில் தளரப்பூசி, அரை மணி நேரம் வைத்திருந்து பிறகு உடலை மாவினால் கழுவி சுத்தம் செய்து வந்தால் நகங்கள் நல்ல பிரகாசமாக காட்சியளிக்கும்.

* பாலைக் கொதிக்க வைத்து, இறக்கி, பொறுக்கும் சூடாக இருக்கும்போது நகங்களை அதில் படுமாறு நனைத்து, பின்பு சுத்தமான பஞ்சைக் கொண்டு நகங்களை நன்கு தேய்த்து, பாலிஷ் செய்தால் நல்ல பளபளப்பைப் பெற்று, பெருசாக தோற்றமளிக்கும்.

* பூந்திக் கொட்டையை வாங்கி, தண்ணீரில் ஊற வைத்து தேய்த்தால் சோப் நுரைபோல் வரும். அந்த நுரையைக் கொண்டு நகங்களை சுத்தம் செய்தால் நகங்கள் பளிச்சென்று பளபளக்கும்.

-அ.திவ்யா, காஞ்சிபுரம்.

மருந்தாகும் குப்பைமேனி

* குப்பைமேனிச் சாற்றைக் குடித்தால் சளி, இருமல் குணமாகும். நெற்றியில் தடவினால் தலைவலி நீங்கும்.

* குப்பைமேனி இலையை அரைத்துக் காதோரம் போட்டால் காதுவலி நீங்கும்.

* படுக்கைப் புண்களுக்கு குப்பைமேனி இலையைப் பொடி செய்து புண்களின் மீது வைத்துக் கட்டினால் புண்கள் குணமாகும்.

* குப்பைமேனி இலையை அரைத்து அதனுடன் சுண்ணாம்பு கலந்து குழப்பி சீழ், வீக்கம் மற்றும் கட்டிகள் மீது தடவினால் குணமாகும்.

* குப்பைமேனிச் சாற்றுடன் சிறிது கருப்பட்டி, சிறிது சுண்ணாம்பு சேர்த்துக் குழப்பி தொண்டையில் பற்று போட தொண்டை வலி,
தொண்டைக்கட்டு குணமாகும்.

* குப்பைமேனிச் சாற்றைச் சுண்டக் காய்ச்சி மெழுகுநிலைப் பதத்தில் குழந்தைகளுக்குக் கொடுக்க இருமல் நீங்கும்.

* குப்பைமேனிச் சாற்றுடன் நல்லெண்ணெய் சேர்த்து சுண்டக் காய்ச்சி உடலில் தேய்த்தால் உடல்வலி மற்றும் மூட்டுவலி குணமாகும்.

* நாள்பட்ட புண்கள், விஷக்கடி ஆகியவைகளுக்கு குப்பைமேனி இலையுடன் மஞ்சள் வைத்து அரைத்துத் தடவினால் குணமாகும்.

* குப்பைமேனி இலையுடன் இரண்டு பல்பூண்டு சேர்த்துப் பொடி செய்து குழந்தைகளுக்குக் கொடுத்தால் வயிற்றில் புழு நீங்கும்.

* குப்பைமேனி இலைச்சாறு பல்நோய், தீக்காயம், வயிற்றுவலி, நமைச்சல், குத்தல், இரைப்பு வலி நோய், மூக்கில் நீர் வடிதல், கோழை ஆகியவற்றைக் குணமாக்கும்.

* குப்பைமேனி வேரை அரைத்துக் கொட்டைப் பாக்களவு எடுத்து 175 மி.லிட்டர் பசும்பாலில் கலந்து மூன்று நாள் குடித்துவர எலிக்கடி விஷம் நீங்கும்.

* குப்பைமேனிச் சாற்றுடன் சுக்கை இழைத்து நெற்றியில் பற்று போட்டு சாம்பிராணிப் புகை நெருப்புச் சூடு காட்ட தீராத தலைவலியும் உடனே தீரும்.

- இரா.ரெங்கசாமி, தேனி.