ப்ரியங்களுடன்...முத்துப்பல் சிரிப்பல்லவோ சிம்பிள் + எச்சரிக்கையாக இருந்தது பயனுள்ள பக்கம்.எங்கள் மீது வெளிச்சம் பட வேண்டும் என்று கூறும் துர்க்கா கலைகள் மீது உள்ள ஆர்வம் மற்றும் இவரின் சாகசங்களை படிக்கும்போது நிச்சயம் இவரின் ஆசை வருங்கால குழந்தைகள் மூலம் நிறைவேறும் என்று வாழ்த்துகிறேன்.
- ராஜி குருசுவாமி, ஆதம்பாக்கம்.

விஜயகுமாரி அருகில் இருப்பதுபோல் ப்ரமை, இரண்டு இதழ்களாக அசத்தி வருகிறார். நானும் ஒரு பெண் படத்தின் ‘கண்ணா கருமை நிறக் கண்ணா....’ பாடல் ஒன்றே போதுமே. படிக்க படிக்க இவ்வளவா என அதிசயிக்க வைத்துவிட்டாரே.
- குருசுவாமி, சென்னை.

மின்சாரம் இல்லை என்றால் வாழ்க்கையே இல்லை என்று நினைக்கும் இந்த உலகில் மின்சாரம் இல்லாமல் வாழும் டாக்டர் ஹேமா சென் முற்றிலும்  மாறி விட்டார். இவரைப்போன்று பலரும் இருந்தால் பணமும் மிச்சம், மின்சார சேமிப்பும் அதிகமாகும்.
- வண்ணை கணேசன், பொன்னியம்மன்மேடு.

சின்னத்திரை நடிகை பிரியங்காவின் பேட்டியில் கெட்ட நேரம் வந்தால் கண்டிப்பாக நல்ல நேரமும் வரும். இது நூற்றுக்கு நூறு உண்மைதான்.
- கணேசன், சென்னை.

ஆண்கள் வெற்றியின் பின் பொதுவாக அவர்களின் மனைவி இருப்பார்கள். ஆனால் தடகளப்போட்டி வீராங்கனை கோமதி மாரிமுத்துவின் வெற்றியின் பின் அவரது தந்தையிருந்திருக்கிறார் என்பதைப் படித்து பெருமிதம் கொண்டேன். பாசமும், லட்சியமும் கொண்ட அப்பா கிடைப்பது அரிது.
- கே.பிரபாவதி, மேலகிருஷ்ணன் புதூர்.

‘முயற்சியுடையார் இகழ்ச்சியடையார்’ என்ற பொன்மொழிக்கேற்ப விடாமுயற்சி செய்து தனது ஐ.ஏ.எஸ். கனவை நனவாக்கி சாதித்த தர்மலாயின் பேட்டி ஒரு லட்சியத்தை நோக்கி பயணித்து அதில் வெற்றி பெற முயற்சிப்பவர்களுக்கு உற்சாகத்தை ஊக்கத்தை
அளிக்குமென்பதில் ஐயமில்லை.
- அயன்புரம் டி.சத்திய நாராயணன், பட்டாபிராம்

‘பிரச்னைகள் தீர்க்கும் பிரத்யங்கராதேவி’ ‘சக்தி தரிசனம்’ வாசித்தேன். நேரில் சென்று தரிசிக்க மனம் விழைகிறது. அன்னையின் பேரருள் இருக்கும் வரை, பிரச்னைகளில் இருந்து நம்மைக் காப்பாள் என்ற திடமும் நமக்குள் ஏற்படுகிறது.‘இந்தியா வாழ்க்கைக்கான பள்ளிக்கூடம்’ என ஓர் அயல்நாட்டுப்பெண் நம் தேசத்தின் தனிச்சிறப்பை எடுத்துரைக்கிறது நம் நாட்டவர்களும் இதை உணர வேண்டும்.
- எஸ்.வளர்–மதி, கன்–னி–யா–கு–மரி.