தோழி சாய்ஸ் 
 
 
காதலர் தின ஸ்பெஷல்
  கணவனும் – மனைவியும் அல்லது காதலனும்-காதலியும் ஒரே நிறத்தில் உடை போடுவதெல்லாம் தியாகராஜ பாகவதர் கால பழசு.  மேலும் அப்படி அணிகையில் சில நிறங்கள் ஆண்களுக்கு அவ்வளவாக எடுப்பதில்லை. கிளிப்பச்சை, பிங்க் மாதிரியான  வண்ணங்களை நாம் ஆண்களின் மேல் பயன்படுத்த முடியாது. இப்போதெல்லாம் குடும்பமே ஒரே மெட்டீரியலில் அதிலும்  பெண்ணுக்கான ஸ்டைலில் பெண்ணும், ஆணுக்கான ஸ்டைலில் ஆணும் அணிவதுதான் புது டிரெண்ட். இதில் சிறப்பே  குழந்தைகளுக்கான உடைகளும் இணைந்தே வருவதுதான். அதிலும் செட் வெறும் ரூ.3000த்தில் எனில் சிறப்போ சிறப்பு அல்லவா.  கொஞ்சம் ஷார்ட் உடைகள் அணியும் பெண்களின் குடும்பத்திற்கான செட்.
   கோடைகால ஹாலிடே செட்  புராடெக்ட் கோட்: 32795879256 www.aliexpress.com விலை: ரூ.2500
  பீச் டோட் பேக் புராடெக்ட் கோட்:  B074DGHN65 www.amazon.in விலை: ரூ.397
  பீச் சாண்டல்  புராடெக்ட் கோட்:  B011N9NYRC www.amazon.in விலை: ரூ.750
  வேலன்டைன் ஜோடி ஸ்பெஷல் 
   இது கடந்த இரண்டு வருடங்களாகவே டிரெண்டில் உள்ளன. அதிலும் இப்போது இந்திய மார்க்கெட்டில் தமிழ், இந்தி உள்ளிட்ட இந்திய  மொழிகளிலும் களமிறங்கி வருகின்றன. இருவருக்குமான இரண்டு டி-ஷர்ட்கள் இணைந்தே ரூ. 800 முதல் ஆன்லைனில்  விற்பனைக்கு உள்ளன. 
  எல்லோரும் டி-ஷர்ட்-ஜீன் அணிய மாட்டார்களே... மேலும் வீட்டில் விசேஷம் எனில் டி-ஷர்ட் போட்டுக்கொண்டா நிற்க முடியும்?  என்னும் உங்கள் கேள்விகள் காதில் விழுகின்றன. அதற்கும் ஆப்ஷன்களை கொடுக்க ஆரம்பித்துவிட்டார்கள் வியாபாரக் காந்தங்கள்.  குர்தா மற்றும் புடவை என புடவையில் வரும் டிசைன்களோ அல்லது எம்பிராய்டரியோ என அப்படியே குர்தாவில் டிசைன் செய்து  கொடுப்பது. இவை தற்சமயம் காட்டன்களில் ஆன்லைனிலேயே கிடைக்கின்றன.
  மேட் ஃபார் ஈச் அதர் டி-ஷர்ட்  புராடெக்ட் கோட்: UNCR0098 www.humpteedumptee.in விலை: ரூ.1199
  காட்டன் சேலை மற்றும் தூபியான் சில்க் குர்தா புராடெக்ட் கோட்: ALVC1 www.nrbbazaar.com விலை: ரூ.4,211 (குர்தா,  சேலை இரண்டும்  இணைந்து) 
 
  -ஷாலினி நியூட்டன் 
  
  
 |