ப்ரியங்களுடன்...



டப்பிங் கலைஞர் நிம்மி ஹர்ஷனின் பணி அழுத்தம் கடுமையானது. அதைவிட அவர் ஆற்றல் உயர்வானது. அவர் சாதனை என்றும்  பேசப்படும் என்பது பேருண்மை!
- ஆர்.கே.லிங்கேசன், மேலகிருஷ்ணன்புதூர்.

‘மௌனம் ஏற்படுத்திய மௌனம்’... பெண் நினைத்தால் எதையும் சாதிக்கலாம் என்பதற்கு உதாரணம் உமாமகேஸ்வரி. ஐ.டி.யில்  வேலை செய்து, குடும்பத்தை கவனித்து, புத்தகம் எழுதுவதென்றால் ரியல் தி கிரேட். பெண்கள் அனைத்து துறையிலும் சாதித்த  நிலையிலும் கடலில் சென்று மீன் பிடித்து அந்த துறையில் சாதித்த ரேகாவை எவ்வளவு பாராட்டினாலும் தகும்.
- வண்ணை கணேசன், பொன்னியம்மன்மேடு, சென்னை.

மானுடவியலின் ஆய்வு மாணவி ஹேமமாலினி பற்றியத் தகவல் கட்டுரையும், சபரிமலையின் 19 ஆம் படி வனிதா மதில் எனும்  கட்டுரையும் தோழி இதழின் பெருமைக்கும் சிறப்புக்கும் உரியதாக இருந்தன.
- ப. மூர்த்தி, பெங்களூர்.

கிச்சன் டைரீஸ் பகுதியில் எக்ஸ்பர்ட் விசிட் அருமையான, ஆரோக்கியத்தை மேம்படுத்தும் விஷயங்களை அள்ளித்தந்தது.  ‘குழந்தைகளின் ஸ்பா’ குழந்தைகள் குறித்து சிந்திக்க வைத்தது. ‘கப் கேக் 30 வகைகள்’ இணைப்பு கேக் போலவே மிக அருமை.
- எஸ். வளர்மதி, கொட்டாரம்.

பெண்களால் பெண்களுக்காக மட்டும் இயங்கும் ஆட்டோ குறித்த (MAUTO) தகவல்கள் அருமை. அந்த அமைப்பின் நிர்வாக இயக்குனர் யாஸ்மின் ஜவஹருக்குப் பாராட்டுக்கள்.
- மோனிஷா பிரியங்கா, திருச்சி.

போட்டி தேர்வுகளுக்கான ஆப்(APP)கள் பற்றிய தகவல்கள் கல்வி வழிகாட்டியாக பலனும் பயனும் தந்தது.
- கவிதா சரவணன், ஸ்ரீரங்கம்.

தென்னகத்தின் முதல் கனவுக்கன்னி வைெஜயந்திமாலா பற்றிய கட்டுரை மனங்கவர்ந்தது. அஞ்சலிதேவியும் இவரும் இணைந்து  நடித்த பட செய்திகள் அபாரம்.
- சு.கௌரிபாய், திருவள்ளூர்.

அட்டையில்: சந்தனா ராஜ்