தீர்ப்பும் கருத்தும்



‘ஒவ்வொருவருக்கும் தனிப்பட்ட விருப்பு வெறுப்பு இருக்கும் என்றும்,  சமபாலீர்ப்பு தண்டனைக்குரிய குற்றமல்ல’ என்று கூறிய உச்ச  நீதிமன்றம் ‘தன்பால் சேர்க்கை  சட்ட விரோதமானதுஅல்ல’ என்று செப்டம்பர் 6 அன்று தீர்ப்பு வழங்கியது. முக்கியத்துவம் வாய்ந்த இந்த  தீர்ப்பை பிரபலங்கள் பலரும் வரவேற்றிருக்கின்றனர்.

குஷ்பூ


‘‘இது வரலாற்றுச் சிறப்புமிக்க தீர்ப்பு.’’

சித்தார்த்

“மீண்டும் எமது மக்களை பாதுகாத்துள்ள மதிப்புமிக்க உச்ச நீதிமன்றத்திற்கு நன்றி. அனைவருக்கும் வாழ்த்துகள். இது ஒரு சிறந்த நாள்.  இந்த நாளுக்காக போராடிய அனைவருக்கும்  வாழ்த்துகள்.”   

ஹிமோ குரேஷி

இந்தத் தீர்ப்பை நாம் அனைவரும் வரவேற்கவேண்டும். தீர்ப்பு வந்துவிட்டது. மக்களின் மனங்களில் மாற்றம் வரவேண்டும்

த்ரிஷா


“தன்பால் சேர்க்கை சம்பந்தமான 377 சட்டப் பிரிவு ரத்து செய்யப்பட்டு உள்ளது. இதன் மூலம் சம உரிமைக்கு செல்வதற்கான வழி  கிடைத்துள்ளது.
ஜெய் ஹோ.”

ஆர்யா :

“எல்லோருக்கும் சம உரிமை இருக்க வேண்டும். சாதி, மதங்கள் கடந்து பிடித்தவர்களுடன் இருப்பது அவவர் உரிமை. இப்படித்தான் இருக்க  வேண்டும் என்று நிர்ப்பந்திப்பது தவறு. மாற்றங்களை ஏற்கவேண்டும். இந்த தீர்ப்பு ஒரு மாற்றத்துக்கான வழிதான்

ஜெ சதீஷ்