ப்யூட்டி பாக்ஸ்



ஆரோக்கியம் சார்ந்த அழகே அனைவருக்கும் நல்லது

குழிகளை மறைக்க O3 + ஃபேஷியல்

சென்ற  இதழில், பரு வந்து நீங்கிய இடத்தில் குழி, பள்ளம் என்பது ஏன் வருகிறது, யாருக்கெல்லாம் வருகிறது என்பதையும், வருவதற்கு  முன்பும், வந்துவிட்டால் எப்படி முகத்தை தற்காத்துக்கொள்வது என்பது பற்றியும் விரிவாய் பார்த்தோம். இந்த இதழில் பார்லரில்  செய்யப்படும் ஃபேஷியல் மூலமாக, முகத்தில் ஏற்படும் குழிகள் எப்படி சரி செய்யப்படுகின்றன என்பதையும், வீட்டில் உள்ள பொருட்களைக்  கொண்டு நாமாகவே எப்படி சரி செய்வது என்பதையும் காண்போம்.முகத்தில் இருக்கும் குழிகளை நீக்க O3+  ஃபேஷியலே சிறந்தது. குழிகள்  கம்மியாக இருந்தால் 3 முதல் 4 அமர்வு எடுக்க வேண்டும். அதிகமாக இருந்தால் தொடர்ச்சியாக எடுக்க வேண்டும். 3வது அமர்விற்குப்  பிறகே முகத்தில் சற்று மாற்றம் ஏற்படத் துவங்கும். துளைகளின் அளவு சிறிது சிறிதாகவே மறையத் துவங்கும்.

பார்லரில் செய்யும் ஃபேஷியல்…

தேவையான பொருட்கள்

கிளன்சிங், ஸ்க்ரப், டிஷ்யூ பேப்பர் மாஸ்க், டோனர், மசாஜ் க்ரீம், ஃபீல் ஆஃப் மாஸ்க்.


மேற்குறிப்பிட்ட  ஃபேஷியலை செய்துகொள்ள சற்று கூடுதல் செலவு எடுக்கும். வீட்டில் உள்ள பொருட்கள் கொண்டு நாமாக எப்படி   ஃபேஷியல் செய்வது என்பதையும் காண்போம். தோலிற்குத் தேவையான எலாஸ்டிசிட்டி தன்மையினை பாதாம், தயிர், விளக்கெண்ணை,  நல்லெண்ணெய் போன்ற வீட்டில் இருக்கும் பொருட்களை பயன்படுத்தி கொண்டு வரலாம் என்பதை முன்பே பார்த்திருக்கிறோம். தோலில்  எண்ணெய்த் தன்மை இருந்தாலே தோல் மிருதுவாகி, எலாஸ்டிசிட்டி தன்மை இயல்பாக வந்துவிடும்.

வீட்டிலே செய்யும் ஃபேஷியல்…

1. சாதாரண நீரால் முகத்தை சுத்தம் செய்யவும்..
2. அரை ஸ்பூன் லெமனோடு 2 ஸ்பூன் நீரை சேர்த்து, முகத்தை க்ளன்ஸ் செய்யவும்.
3. ஊறவைத்த கசகசாவை தடவி மெல்லிய மசாஜ் கொடுக்கவும்.
4. மிதமான குளிர்ந்த நீர் அல்லது அரிசி களைந்த நீரைப் பயன்படுத்தி சுத்தப்படுத்தவும்.
5. பப்பாளி பழத்துடன், மஞ்சள் பூசணியை மசித்து, முகத்தில் தடவி மசாஜ் கொடுக்கலாம்.
6. ஒரு ஸ்பூன் அரிசி மாவுடன், அரை ஸ்பூன் பாதாம் பவுடர் சேர்த்து பேக் போடலாம். சற்று உலர்ந்த நிலையில் மாஸ்க்கை நீக்கி சுத்தம்  செய்யவும்.

வாசகர்களுக்கு எழும் சந்தேகங்களுக்கு இதழ் முகவரிக்கு ‘ப்யூட்டி பாக்ஸ்’ என்னும் பெயரில் கேள்விகளை அனுப்பினால் அழகுக்கலை  நிபுணர் ஹேமலதா தங்கள் கேள்விகளுக்கு பதில் அளிப்பார்.

வாசகர்களின் கேள்விகள்…

* ஆண், பெண் இருபாலரும் பயன்படுத்தும் ஃபேஷியல் க்ரீம்மிற்கு வித்தியாசம் உண்டா?
அதிகபட்சம் வித்தியாசம் இருக்காது.  ஃபேஷியல் க்ரீம் என்பது பிராண்டைப் பொருத்து மாறுபடும். ஆனால் டெய்லி ஃபேர்னஸ் க்ரீம்  மட்டும் இருவருக்கும் தனித்தனியாக உண்டு.

*  சரும நோய் வரக் காரணம்? இது இருபாலருக்
கும் வேறுபடுமா?
சரும நோய் வர பெரும்பாலும் மரபணுவே காரணம். உதாரணம் சோரியாசிஸ், பிக்மென்ட் போன்றவை. முகப்பரு போன்ற ஒரு சில சருமப்  பிரச்சனை மட்டுமே இருபாலரில் வேறுபடும்.

*  மரு, முகப்பரு இரண்டுக்கும் உள்ள
வேறுபாடு?
இரண்டும் வேறுவேறு. இரண்டிற் குமான அறிகுறிகளும் வேறு. மருஉடலின் எந்தப் பகுதியிலும் வரலாம். முகப்பரு முகத்தில் மட்டுமே  வரும்.

அடுத்த இதழில்…
ஸ்கின் லிஃப்டிங் என்றால் என்ன என்பதைப் பற்றி விரிவாகக் காணலாம்.

எழுத்து வடிவம்: மகேஸ்வரி
படங்கள்: ஆ.வின்சென்ட்பால்
(தொடரும்)