தோழி சாய்ஸ்ஷர்ட் குர்தா

வேலைக்குச் செல்ல, ஸ்கூட்டி ஓட்ட, பேருந்து பயணம், அலுவலக மீட்டிங் என அனைத்திற்கும் ராயல், சிம்பிள் மற்றும் வசதியான லுக்  கொடுப்பதில் இந்த ஷர்ட் குர்தாக்களை அடித்துக்கொள்ளவே முடியாது. போல்ட், ஆபீசர் லுக் கொடுப்பதிலும் முதலிடம் இந்த  குர்தாக்களுக்கு தான். சிம்பிள் ஆக்ஸசரிஸ்களுடன் மேட்ச் செய்தாலே போதும். காலர் இருப்பதால் துப்பட்டா தேவைப்படாது.  வேண்டுமானால் ஸ்டோல் அல்லது ஸ்கார்ஃப் பயன்படுத்தலாம். முக்கியமான அட்வைஸ் உள்ளாடையில் கவனம் தேவை. பிரேசியரில்  ஒயர்கள் அல்லது நடுவில் தையல் இல்லாத ஜீன் டாப் உள்ளாடை அணிய வேண்டும்.

பிங்க் நிற ஷர்ட் குர்தா
பலாஸோ அல்லது வெள்ளை நிற லெக்கிங்ஸுடன் பயன்படுத்தலாம்.
புராடெக்ட் கோட்: 440825860013
www.reliancetrends.com
விலை: ரூ.481

வெள்ளை நிற பீட் காதணி
புராடெக்ட் கோட்: 6982204
www.myntra.com
விலை: ரூ.238

லெதர் பேக்பேக்+வாட்ச்
புராடெக்ட் கோட்: B078Q2VZWL
www.amazon.in
விலை: ரூ.429

அவுட்ஃபுட் இன்னும் கொஞ்சம் ஸ்பெஷலாக தெரிய லெதர் காலணி மற்றும் பேக் பேக் பயன்படுத்தலாம். இந்த பேக் பேக் அமேசான்  தளத்தில் ஒரு வாட்ச் இணைப்பாகக் கிடைப்பதால் பிரேஸ்லெட் தேவைப்படாது.

லெதர் ஃபிளாட் ஷூ
புராடெக்ட் கோட்: 202917636_9124
www.amazon.in
விலை: ரூ.1995

வெள்ளை நிற பீட் பிரேஸ்லெட்புராடெக்ட் கோட்:
B01G2G7T6S
www.amazon.in
விலை: ரூ.399

ஒரு சேஞ்சுக்கு இந்தக் குர்தாவை பென்சில் டிப் ஜீன் அல்லது க்ராப்ட் ஜீன் பேன்ட்டுடன் மேட்ச் செய்யலாம். பின்பகுதியை முழுமையாக  மறைப்பதால் பப்ளி பெண்களுக்கும் கியூட் லுக் கொடுக்கும் உடை இது. வெளிர் நீல நிற டாப் என்பதால் கீழே டார்க் நிற ஜீன்  பயன்படுத்தினால் பக்கா மேட்சிங்காக இருக்கும்.

காலர் ஸ்ட்ரிப் குர்தா
புராடெக்ட் கோட்: 203264773_9308
www.shoppersstop.com
விலை: ரூ.599

ஸ்டோன் பிரேஸ்லெட்
புராடெக்ட் கோட்: B077RYVS5J
www.amazon.in
விலை:  ரூ.699

ஸ்டோன் ஸ்டட் காதணி
புராடெக்ட் கோட்: JEA000398504N
www.clubfactory.com
விலை: ரூ.234

ஜீன் என்பதால் ஸ்னீக்கர் ஷூக்கள் அணிந்தால் வயது குறைந்த... மேலும் எனெர்ஜி லுக் கொடுக்கும்.

ஸ்கின்னி ஜீன்
புராடெக்ட் கோட்: 5492046
www.myntra.com
விலை: ரூ.1259

கருப்பு நிற பேக் பேக்
புராடெக்ட் கோட்: XXX000668407N
www.clubfactory.com
விலை: ரூ.411

கருப்பு நிற ஸ்னீக்கர் ஷூ
புராடெக்ட் கோட்: B075N8YWK4
www.amazon.in
விலை: ரூ.474

-ஷாலினி நியூட்டன்