ப்ரியங்களுடன்



அட்டைப் படத்தில் ஹன்சிகாவைப் பார்த்ததும் மனம் நிறைந்து போனது. ‘உலகின் டாப் 10 அதிசய மணல் குன்றுகள்’... படங்களும் தகவல்களும் வெகு சுவாரஸ்யம்!
- ப.சூரியபிரபா முரளி, சேலம்-1.

பல்துறைகளில் சிகரம் தொட்ட 5 அரிய தோழிகள் பெருமிதம் கொள்ள வைத்தனர்.
- கலா சாகர், சென்னை-64.

கறிவேப்பிலை, கொத்தமல்லி ரெசிபிகள் ‘ஆஹா ஓஹோ பேஷ் பேஷ்!’ என்று சப்புக் கொட்ட வைத்தன.
- வரலஷ்மி முத்துசாமி, சென்னை-37., கே.ராஜேஸ்வரி, மணப்பாறை., ப.முரளி, சேலம்-1., தி.பார்வதி, திருச்சி-7., ரங்கநாயகி ஹரிஹரன், ஸ்ரீரங்கம் மற்றும் ஏழாயிரம்பண்ணை எம்.செல்லையா, சாத்தூர்.

‘பர்ஃபெக்ஷன் வேணுமா பர்ஃபெக்டா இரு’ - தன் வெற்றியின் ரகசியத்தைப் போட்டுடை(ரை)த்த சங்கீதா பானர்ஜியின் தொழில் பக்தி பலே!
- சங்கீதா என்.ஸ்ரீதர், பெங்களூரு-43.

‘மனநலம் காக்கும் மகத்தான செடிகள்!’ அருமை.
- யோ.ஜெயந்தி, கோவை-8 மற்றும் வத்சலா சதாசிவன், சென்னை-64.

‘ஆரோக்கியப் பெட்டகம்’... கோவைக்காயின் மகிமைகள், ரெசிபிகள் அருமை.
- கலைச்செல்வி வளையாபதி, தோட்டக்குறிச்சி மற்றும் மயிலை கோபி, சென்னை-83.

முபின் சாதிகாவின் எழுத்து சாதனை என்றால், அவர் வாழ்க்கை மர்மக் கதை படித்தது போல உணர வைத்தது.
- கே.பிரபாவதி, மேலகிருஷ்ணன்புதூர்.

சக்தி ஜோதியின் ‘உடல் மனம் மொழி’ பகுதி ஆரம்பமே அமர்க்களம்!
- தனலட்சுமி கிருஷ்ணன், திருவாரூர் மற்றும் ப.மூர்த்தி, பெங்களூரு-97.

‘ஐஸ்வர்யா’வுக்கு  அப்பா ராஜேஷ்தான் கூடவே இருந்து காக்கும் தகப்பன் சுவாமி!
- பி.வைஷு, சென்னை-68.

‘சோயா சன்க்ஸ் மஞ்சூரியன்’ படங்களும் செய்முறைகளும் சூப்பர்!
- பொன்.இந்திராணி, சென்னை-32.

தம்பதியர் நிறைவோடு வாழ வழிகாட்டும் டாக்டர் காமராஜுக்கு வந்தனம்.
- கீதா பிரேமானந்த், சென்னை-68.

‘வர்த்தகத்தில் வாவ் பெண்கள்’ டேட்டா வாய் விட்டு ‘வாவ்’ போட வைத்தது!
- வி.மோனிஷா பிரியங்கா, திருச்சி-18.

‘காற்றில் நடனமாடும் பூக்கள்’ கட்டுரையின் ஒவ்வொரு வார்த்தையிலும் மிளிர்ந்தது சமூக அக்கறை. ‘சேலஞ்ச்’சில் தோழிகள் ஆதர்ச எடையை அடைய வாழ்த்துகள். கோட்டீஸ்வரி கண்ணன் அசாதாரணமான தோழி! ‘கணிதம்... எதிர்காலம் கனகச்சிதம்’ பொருத்தமான தலைப்பு. ‘மலாலா மேஜிக்’ உண்மையிலேயே ஆச்சரியம்! ஸ்மிதா சதாசிவனின் தன்னம்பிக்கை சோர்ந்து போகிறவர்களுக்கான டானிக்!
- எஸ்.வளர்மதி, கொட்டாரம்.

‘பொண்ணுங்களுக்கு அம்மா-அப்பாவோட சப்போர்ட்டும் கணவரோட சப்போர்ட்டும் ரொம்ப முக்கியம்’... கோட்டீஸ்வரி கண்ணன் சொல்வது மறுக்க முடியாத உண்மை.
- ரஜினி பாலா, சென்னை-91 (மின்னஞ்சலில்)...

கிர்த்திகா தரனின் பன்முகம் பிரமாதம். ‘ட்வின்ஸ்’ பாசக்காரிகள் செம க்யூட். வாரி அணைத்துக் கொள்ள ஆவல். ‘ஃபேஸ்புக் ஸ்பெஷல்’ அட்டகாசம்!
- ராஜி குருஸ்வாமி, சென்னை-88 மற்றும் உமா சுந்தர், ஸ்ரீரங்கம் (மின்னஞ்சலில்)... 

‘பல்சுவை சிறப்பிதழ்’ பக்கத்துக்குப் பக்கம் விருந்து! வீட்டு நிர்வாகம் பற்றித் தெரிந்த பெண்களுக்கு பண நிர்வாகத்தைப் பற்றியும் கற்றுத் தரும் ரேணு மகேஸ்வரிக்கும் அதற்கு வழிவகுத்த குங்குமம் தோழிக்கும் ஒரு சல்யூட்! விக்னேஸ்வரி சுரேஷின் பகிர்வு அழுத்தம் திருத்தம்.
- பிரதீபா வள்ளியூர் ஏ.பி.எஸ்.ரவீந்திரன், நாகர்கோவில்.