வார்த்தை ஜாலம்



பொண்ணு நல்ல செவப்பு

பொண்ணு நல்ல செவப்பு... இப்படிப் பலர் சொல்லுவதைக் கேட்டிருப்போம். சிவப்பு என்பதை இங்கு வெண்மையை உணர்த்தும் சொல்லாகவே பயன்படுத்துறோம். இதை உவமையா புரிஞ்சுக்காம, அப்படியே எடுத்துகிட்டா, எவ்ளோ கொடூரமா ஆகிடும்! பொதுவா ஆங்கிலத்தில் நிறம் பற்றிப் பேசும் போது Skin tone  மற்றும் Complexion என்றுதான் சொல்வார்கள். நாம்தான் அதை ‘கலரு’ (Colour) என்று கூறி புது வார்த்தையை
உருவாக்கினோம்!

Skin tone, Complexion... இரண்டுமே ஒரே அர்த்தம் கொண்ட வார்த்தைகள் அல்ல... வெவ்வேறு அர்த்தம் பொதிந்தவை!Skin tone is how dark or light you are - அதாவது, உங்கள் நிறம் எவ்வளவு வெளிறியது அல்லது கருத்தது என்பதை குறிக்கும் சொல்லே Skin tone.  Complexion என்பது உங்கள் சருமம் எவ்வளவு மாசு, மரு அற்று ஒரே சீரான நிறத்தில் இருக்கிறது (How flawless or not your skin is) என்பதை குறிக்கும் சொல்.

ஒரு மனிதரின் நிறத்தை குறிக்கும் சொல்லாக  வெளிறிய / வெளுப்பு / கருப்பு / வெயிற்பட்டு கருத்த கலப்பு நிறம் என்பது நமது பழக்கம். இதையே ஆங்கிலத்தில் pale/fair/dark/tanned skin என்பார்கள்.முகத்தின் சுருக்கங்களின் (Wrinkles) தன்மையைகுறிக்கும் சொற்களாக deep / fine / little / facial wrinkles ஆகியவையும் பயன்பாட்டில் உள்ளன.

Complexion ஐ குறிக்கும் சொற்களாக dark / pale / light / sallow / ruddy / olive / swarthy / clear
ஆகியன உள்ளன. இதில் dark / pale / light போன்றவை நமக்கு ஏற்கனவே தெரிந்தவை. Sallow என்பது unhealthy yellow or pale brown colour... ரத்தம் இன்றி வெளிறிப்போன வாதுமை நிறம்...
 
Ruddy என்பது healthy red colour... ஆரோக்கியமான செக்கச்செவேல் நிறம். அதாங்க சுண்டி விட்டா சிவந்திடும் அழகு நிறம்!
Oliveனா பச்சையா இருக்குமான்னு கேட்கக் கூடாது! இங்கு Olive என்பது slightly beige, moderate brown colour - அதாவது, கிரேக்கம், இத்தாலியில் வசிக்கும் மாநிற மக்களை இப்படிச் சொல்வார்கள். நம்மூரில் இதை மாநிறம் / புதுநிறம் என்போம். Swarthy or dusky என்பது darkcomplexion. அதாவது, ஆப்ரிக்கர்கள் போல கருத்தபிள்ளைகளை குறிக்கும் சொல் இது. இனிமேல் பொதுவா செவப்பு கருப்புன்னு சொல்றதை மாற்றி, ஸிuபீபீஹ், ஞிusளீஹ்ன்னு தெளிவா சொல்ல பழகலாமே!


சிவப்பு என்பதை இங்கு வெண்மையை உணர்த்தும் சொல்லாகவே பயன்படுத்துகிறோம்!