ப்ரியங்களுடன்...



*என்னுடைய வலிகள்தான் என் கவிதைகள் என்று சொன்ன சரோஜினியின் வார்த்தைகள் நம் மனதையும் வலிக்கச் செய்கின்றன.
- பானுமதி வாசுதேவன், மேட்டூர்.

*அதிகரிக்கும் குழந்தை திருமணம் என்பது நம் அறிவுக்கு அவமானம். முன்னேறிய சமூகத்தில் தீவிரமாக தடுக்க வேண்டிய சமூகக்
கொடுமையாகும்.
- அண்ணா அன்பழகன், அந்தணப்பேட்டை.

*உடல் ஆரோக்கியத்திற்கு உகந்த மூலிகை தொக்குகளால் வாழ்க்கையில் உயர்ந்த ஈரோடு பிரேமா அவர்களின் பணி பாராட்டுக்குரியது.
- ஏ.எஸ்.எம்.ஜோசப், பழைய வண்ணாரப்பேட்டை.

*நாக தோஷம் நீக்கும் நல்லதோர் திருத்தலமாக திகழும் திருமுருகன் பூண்டி ஆலயத்தின் மகத்துவங்களை விவரித்த கட்டுரை அந்த ஆலயத்தை தரிசித்த சந்தோஷத்தை அளித்துவிட்டது.
- த.சத்தியநாராயணன், அயன்புரம்.

*கங்கை கொண்ட சோழபுரத்தை அழகு புகைப்படத்துடன் எங்கள் கண் முன்னே ஜொலிக்க செய்துவிட்டீர். வாழ்த்துகள்.
- ரீஜா மனோகரன், சூளை.

*குழந்தைக்காக ஆரம்பித்து பிறகு அதை முழு நேர தொழிலாகவே மாற்றி அமைத்தது அற்புதம். எல்லோரும் அரசாங்க வேலையை நம்பிக் கொண்டிருக்கும் இவ்வேளையில் அனைவரும் இதை கையாண்டால் வேலையில்லா பிரச்னை தீரும்.
- வண்ணை கணேசன், சென்னை.

*பள்ளியில் படிக்கும் காலத்திலேயே மாணவர்களை ஒரு தொழில் முனைவோர்களாக மாற்றியமைக்கும் நற்பணியில் ஈடுபட்டுள்ள கோயம்புத்தூர் எஸ்.எஸ்.வி.எம் கல்வி நிறுவனத்தின் பொதுச் சேவை போற்றத்தக்கது.
- அ.செல்வராஜ், கரூர்.

*உங்கள் பழைய வண்டிக்கு புது லைஃப் என்ற அட்டைப்பட கட்டுரை நாயகி சிவசங்கரி பழையன கழிதலும், புதியன புகுதலும் என்பதை பழையதிலேயே புதியவையை புகுத்தி புயலென புறப்பட்ட ‘புதுமைப் பெண்’தான்.
- காசி யோக அக்‌ஷயா, கோவை.

*‘சென்னையில் களைகட்டிய காரைக்குடி பெண்களின் சந்தை’... காரைக்குடியின் பாரம்பரியத்தை உலகம் முழுவதும் அறியும் வண்ணம் செயலில் ஈடுபடும் தோழிகளுக்குப் பாராட்டுகள்!
- எஸ்.வளர்மதி, கன்னியாகுமரி.

*பெண் ஆதிக்கம் என்பது பெண் சுதந்திரமல்ல தலைப்பும் அருமை, விளக்கமும் அருமை. புரியும்படியாக சொல்லி  ஆண்-பெண் இருவரும் சமம், விட்டுக் கொடுத்து வாழ்வது பற்றி ஆணித்தரமாக ெசால்லியிருக்கிறார் லதா மேடம். வாழ்த்துகள்.
- ராஜி குருசாமி, ஆதம்பாக்கம்.

அட்டைப்படம்: லுதுஃப் புகைப்படம்: விகாஸ்ராஜா, மேக்கப்: கௌசல்யா