லாமா பந்தயம்



ஒட்டக வகையைச் சேர்ந்த ஒரு விலங்கினம் லாமா. தென் அமெரிக்காவின் மலைப்பகுதிகளில் இந்த விலங்குகள் அதிகமாக வாழ்கின்றன. ஈக்வடாரில் ஒவ்வொரு வருடமும் லாமா பந்தயம் நடக்கும். இதில் சிறுவர்கள் மட்டுமே பங்குபெற முடியும். 500 மீட்டர் தூரமே இந்தப் பந்தயம். லாமாவின் மீது சிறுவர்கள் பயணிப்பது கொள்ளை அழகு.