வைரல் சம்பவம்அபுதாபியில் உள்ள ஒரு நிறுவனத்தில் அக்கவுண்டண்ட்டாக வேலை செய்கிறார் ரமீஸ் ரஹ்மான். கேரளாவைச் சேர்ந்தவர் இவர். ரஹ்மானின் மகன் முகமது சலாவுக்கு வயது 1. சமீபத்தில் ரஹ்மான் ஒரு லாட்டரியை மகன் பெயரில் ஆன்லைனில் வாங்கியிருந்தார். அந்த லாட்டரிக்கு ஒரு  மில்லியன் டாலர் பரிசு விழுந்திருக்கிறது.

அதாவது இந்திய மதிப்பில் 7 கோடி ரூபாய். திக்கு முக்காடிப் போன ரஹ்மான் இந்த மகிழ்ச்சி சம்பவத்தை இணையத்தில் தட்டிவிட, உடனே வைரலாகிவிட்டது. அத்துடன் ‘‘மகனின் எதிர்காலத்தைப் பற்றி இனி பயப்படத் தேவையில்லை...’’ என டுவிட்டியிருக்கிறார் ரஹ்மான்.