சிங்க மீன்



அழகானதும் ஆபத்தானதுமான சிங்க மீனைப் பிடிப்பது ரொம்பவே கடினம். அப்படி பிடித்துவிட்டால் பல லட்சங்களை ஈட்ட முடியும். சிங்கத்தைப் போல்  சிலிர்ப்பதால் இதற்கு அந்தப் பெயர். இந்தோனேஷிய கடற்பகுதிகளில் அதிகமாக இவை வாழ்கின்றன.
இதன் துடுப்பில் விஷம் இருப்பதால் விஷ மீன் என்றும் சொல்கின்றனர். ஆனால், பெரிய பெரிய ஹோட்டல்களில் அழகுக்காக கண்ணாடித் தொட்டியில் இந்த மீனை வைத்திருக்கின்றனர். இதன் உடல் பகுதியை உணவாக உட்கொள்பவர்களும் இருக்கின்றனர்.