பிளாஸ்டிக் சாலைஇந்திய விஞ்ஞானிகளில் குறிப்பிடத்தக்கவர் ராஜகோபாலன் வாசுதேவன். கழிவு மேலாண்மையில் இவர் ஆற்றி வரும் பணி பிரசித்திபெற்றது. முக்கியமாக பிளாஸ்டிக் கழிவு களைப் பயன்படுத்தி சாலை அமைக்க முடியும் என்னும் ஆச்சர்யத்தை உலகுக்குக் காட்டியிருக்கிறார். இந்தச் சாலைகளுக்கு ஆகும் செலவு குறைவு.

தவிர, பிளாஸ்டிக்  கழிவுகள் சாலையாக மாறுவதால் அதனால் சுற்றுச்சூழலுக்கு ஏற்படும் தீங்கும் தடுக்கப்படுகிறது. இதுபோக பிளாஸ்டிக் கழிவுகளை கட்டடங்கள் கட்டவும் பயன்படுத்த முடியும் என்று நிரூபித்திருக்கிறார். மட்டுமல்ல, கான்கிரீட் சாலைகள் உருவாவதற்கான நேரத்தைவிட பிளாஸ்டிக் சாலையை உருவாக்க நேரம் குறைவாகத்தான் தேவைப்படும்.

மழையால் பெரிதும் பாதிக்கப்படாது.  இந்தியா வின் கிராமப்புறங்களில் இவரின் பிளாஸ்டிக் சாலை முறையத்தான் பரவலாக கடைப்பிடித்து வருகின்றனர். 2018-ம் ஆண்டு மத்திய அரசு இவருக்கு பத்மஸ்ரீ விருது கொடுத்து கௌரவித்தது.