வைரல் சம்பவம்ஒரு வீட்டை 6 மணி நேரத்தில் கட்ட முடியுமா? ‘‘6 மணி நேரம் இல்லை. அதற்குள்ளேயே கூட முடியும்...’’ என்கிறார் இத்தாலியைச் சேர்ந்த கட்டடக் கலை நிபுணர் ரெனாட்டோ. இங்கே உள்ள படத்தில் நீங்கள் பார்ப்பது 6 மணி நேரத்தில் கட்டி முடிக்கப்பட்ட ஒரு வீட்டைத்தான். இந்த வீட்டின் கட்டுமானத்துக்குத் தேவையான பொருட்களை ரெடிமேடாக வைத்திருக்கிறார்கள்.

எந்த இடத்தில் வீடு கட்ட வேண்டுமோ அங்கே அந்தப் பொருட்களைக் கொண்டு வந்து பொருத்துகிறார்கள். அப்படி பொருத்தும்போதே உள் அலங்காரங்களையும் செய்கிறார்கள். 290 சதுர அடி முதல் 904 சதுர அடி வரையிலான வீடுகளைக் கட்டித் தருகிறார்கள்.

290 சதுர அடியுள்ள வீட்டின் விலை ரூ.27 லட்சம். ‘‘நில நடுக்கம், பெரு மழை, புயல் போன்றவற்றால் வீட்டுக்கு ஏதாவது பாதிப்பு ஏற்பட்டால் சரி செய்து கொடுக்கப்படும்...’’ என்று உறுதியளிக்கிறார் ரெனாட்டோ. இங்கிலாந்தில் உள்ள ஒரு இடத்தில் இந்த வீட்டைக் கட்டும்போது எடுக்கப்பட்ட வீடியோ காட்சிகள் வைரலாகிவிட்டன.