விழிப்புணர்வுபாராளுமன்றத் தேர்தல் அதன் இறுதிக் கட்டத்தை நெருங்கி வருகிறது. இதுவரை நடந்த தேர்தலில் ஆண்களை விட பெண்களே அதிக அளவில் வாக்குகளைப் பதிவு செய்திருப்பதாக புள்ளி விவரம் சொல்கிறது. இந்நிலையில் மத்தியப் பிரதேசத்தின் தலை நகர் போபாலில் இளம் பெண்கள் இரு சக்கர வாகனங்களை எடுத்துக்கொண்டு தேர்தல் விழிப்புணர்வை ஏற்படுத்தக் கிளம்பிவிட்டனர்.