ஆப்பிரிக்காவில் ஓவியக்கலை!



ஆப்பிரிக்காவின் கை பெரா நகரிலுள்ள குடிசைப் பகுதியில் ஓவியப்பள்ளியா என பலரும் ஆச்சரியப்படுகிறார்கள். இரு அறைகளைக்  கொண்ட உவெஸா (Uweza) கலைப்பள்ளி ஆப்பிரிக்க குழந்தைகளின் கலைத்திறனுக்கு வாசலாக அமைந்துள்ளது.  குடிசைவாழ் குழந்தை களின் தினசரி பள்ளிவாழ்வுக்கு தடையில்லாதபடி ஓவிய வகுப்பு நடைபெறுவது

உவெஸா ஸ்பெஷல். 2008 ஆம் ஆண்டு அமெரிக்க தொழிலதி பர் ஜெனிஃபர் சபிட்ரோ, மக்கள் பார்க்கும்படியான இடத்தில்  கலைப்பள்ளியைத் தொடங்கினார். 7-37 வயது மாணவர்களை பள்ளியில் இணைத்து பயிற்சி தந்தார் ஜெனிஃபர். பள்ளி சுவர்களிலுள்ள  அத்தனை ஓவியங்களின் பிரம்மாக்களும் மாணவர்கள்தான். இளமையிலேயே வேலைக்குச் சென்று சம்பாதிக்கும் நிர்ப்பந்த   நிலையில்  ஓவியம் கற்பது நேர விரயம் என்பதே  இங்குள்ளவர் களின் எண்ணம்.  

ரூ.215- 7,898 விலை ரேஞ்சுகளில் விற்கப்படும் ஓவியங்களில் 60% தொகை கலைஞருக்கும், மீதி பள்ளிக்கும் செலவிடப்படுகிறது.  ஆசிரியர் ஓகோத் கூட தந்தையால படிப்பை விட்டுவிட கேட்டுக்கொள்ளப்பட்டாலும் ஓவியப்பயிற்சியைக் கைவிடவில்லை. ஓகோத்  மட்டுமல்ல, இங்குள்ள பிற ஆசிரியர்கள், மாணவர் களின் கதைகளும் இதே ரகம் தான். இருளிலும் வெளிச்ச நம்பிக்கை தருகிற பள்ளி!