அறிவுச் சுதந்திரம்



#{கட்டற்ற_அறிவு}

சில சொகுசு வசதிகளுக்கு பழகிவிட்டால் நம்மால் புதிய முயற்சிகளை செய்யமுடியாது. டிவியில் பட்டன்களை எழுந்து சென்று மாற்றும்  எரிச்சல் பிளஸ் சோம்பலால் ரிமோட் உருவானது. ஆனால் அந்த ரிமோட்டைக் கண்டுபிடிக்கும் அறிவு நமக்கிருந்தால் அது  பிளஸ்பாய்ண்ட்தானே!   ஆனால புதியவற்றை கற்கும் இளமையில் சொகுசை தேடியதால்தான நம்மில் பலருக்கும் கணினி வசதிகளை  பயன்படுத்தினாலும் புரோகிராம்களை சுயமாக  எழுதமுடியாமல் போனது. கணக்கில் கில்லியானால் கணினி புரோகிராம்களை  சொல்லியடிக்கலாம் என்பது அசல் உண்மை. நம்மில் பலரும் அதில் பங்கேற்பாளராக இன்றி பயனராக இருப்பது தற்செயலானதல்ல.  மூளையை பயன்படுத்த விடாமல் சொகுசுக்கு பழக்கி பூட்டுவது பன்னாட்டு மென்பொருள் நிறுவனங்களின் நெடுநாளைய கமர்சியல் சதி.
 
சுதந்திரமும் கட்டுப்பாடும்!
 

விண்டோஸ், மேக் ஓஎஸ் களில் சில புரோகிராம்களை இஷ்டமோ கஷ்டமோ பயன்படுத்த வேண்டியிருக்கும். அதில் உங்களுக்கு பிடித்த  இஷ்ட மாற்றங்களை செய்தால் எப் படியிருக்கும்? கட்டற்ற மென்பொருளை நீங்கள் பழகவேண்டியது அதற்குத்தான்.  புரோகிராம்களில்  தேவையான மாற்றங்களை செய்துகொள்ளும்படி, பிறருக்கு நிபந்தனைகளின்றி பகிரும் சுதந்திரத் தன்மையுடனும் உள்ள மென்பொருளை  கட்டற்ற மென்பொருள் எனலாம். விண்டோஸ், மேக் ஓஎஸ்களில் அதன் ஆதார புரோகிராம்களை பயனர்கள் பார்க்க முடியாது. ஆனால்  லினக்ஸ் ஓஎஸ்ஸில் அவற்றை பார்க்கலாம்; திறமையிருந்தால் மேம்படுத்தவும் செய்யலாம்.    

மைக்ரோசாஃப்ட் ஆபீஸ், அடோப் போட்டோஷாப் ஆகியவை தனியுரிமை பொருட்கள் என்பதால் இதன் புரோகிராம்களை காசு கொடுத்து  வாங்கும் பயனர்கள் பார்க்கவும், மாற்றவும் முடியாது. குறிப்பிட்ட நிறுவன தொழில்நுட்ப குழு மட்டுமே அதனை பார்க்க, மாற்றும் அனுமதி  பெற்றிருப்பார்கள். இதற்கான விதிகளை மென்பொருட்களை நிறுவும் போதே ஒப்பந்தத்தில் காணலாம். சட்டப்படி இதனை காசு கொடுத்து  வாங்குபவர் மட்டுமே பயன்படுத்தலாம்.  நண்பர்களுக்கு பந்திவைத்தால் அது அநியாயக் குற்றம். 

இதற்கு மாற்று குனு லினக்ஸ். சுதந்திர  மென்பொருள் உதா ரணம்: லிபர் ஆபீஸ். அடிப் படையில் இது முதலாளித்து வமும் பொதுவுடைமை தத்துவத்தின் எதிரெதிர் மோதல்  போலவேதான். கட்டற்ற மென்பொருள் என்ற அர்த்தம், இவை விலையின்றி கிடைக்கும் என்ற அர்த்தமல்ல.நிபந்தனைகளின்றி  மென்பொருட்களை பயன்படுத்தலாம்,  பகிரலாம்,  
மேம்படுத்தலாம் என்பதே.

(சேகரிப்போம்)
-வின்சென்ட் காபோ