முத்தாரம் Mini



உலகெங்கும் அரசுகளுக்கு எதிராக எதிர்க்கட்சிகளும் மக்களும் பாசிஸம் புகாரைக் கூறி போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்… 
சுதந்திரம், சமநிலை ஆகியவை ஜனநாயக சமூகத்தில் உண்டு. ஆனால் பாசிசத்தில் ஆணாதிக்கம், மதம், இனம் முன்னிலை பெறும். உண்மையையும் அதற்கான மதிப்பையும் அழித்து பயம் மற்றும் அடிமைத்தனத்தை வளர்க்கும். பெரும்பான்மை சமூகம் ஆட்சியதிகாரம் பெற்றால் ராணுவத்தினர் மூலம் சிறுபான்மையினர் மீதான தாக்கு தல் நடைபெறுவது இதற்கு உதாரணம்.
 
உண்மையின் மதிப்பை அழிப்பது என்பதன் அர்த்தம் என்ன?  

சிறுபான்மையினரை எதிரியாக கட்டமைத்து பயத்தை மக்கள் மனதில் விதைப்பது பாசிச திட்டம். இதன் அடுத்தகட்டம் ஆட்சியை கைப்பற்றி பழங்குடிகளை அடையாளமறிந்து பிரிவினையைத் தூண்டுவதுதான்.
 
இவற்றுக்கு எதிராக ஜனநாயகத்தை எப்படி காப்பது?  

இனவாதம், குழுவாதம் என்பது சிறுபான்மையினருக்கு மட்டுமல்ல, ஒட்டுமொத்த நாட்டிற்கே கேடான ஒன்று. பிறருடன் கலந்து பழகுவதை அச்சுறுத்தலுக்குள்ளாக்கி நம்மை அடிமைப்படுத்தி ஆட்சி செய்வதே பாசிசத்தின் இறுதிக்கட்டம்.

- ஜேசன் ஸ்டான்லி, யேல் பல்கலைக்கழக தத்துவப் பேராசிரியர்.