உங்களுக்குத் தெரியுமா?




*பழங்காலத்தில் ரோம் நாட்டு நாணயங்கள் எருது உருவத்தோடு செவ்வக வடிவில் இருந்தன.

*காங்கோ நாட்டில் 79 சதவீதம் பெண்களுக்கு 18 முதல் 20 வயதிற்குள் திருமணம் முடிந்து விடுகிறது.

*சீன ஆண்டு முறை 12 விலங்குகளின் பெயரால் வழங்கப்படுகிறது.

*காய்கறிகள் பற்றிய ஆராய்ச்சி படிப்புக்கு ‘ஒலரி கல்ச்சர்’ என்று பெயர்.

*குளங்களில் படித்துறைகளிலுள்ள நீரின் உள் இருக்கும் படிகளை ஒட்டியே வாழும் மீன் ‘உளுவை’.

*திபெத் நாட்டு மக்கள், தாங்கள் பிறந்த கிழமையை, தங்கள் பெயருக்கு முன் வைத்துக் கொள்கிறார்கள்.

*ஆஸ்திரேலியா நாட்டிலுள்ள பாடும் பறவை ‘குக்குபுரா’ ஆகும்.

*உலகிலேயே நாடக மியூசியம் ஒன்று மாஸ்கோவில் மட்டும்தான் உள்ளது.

*அமெரிக்காவிலுள்ள டோடோ என்னும் பறவை பறப்பதில்லை.

*மியான்மர் நாட்டிற்கு ‘வேங்கை மரங்களின் நாடு’ என்று ஒரு சிறப்புப் பெயர் உள்ளது.

*சகாரா பாலைவனத்தில் மிக அதிக அளவு வெப்பநிலை 60.2 டிகிரி சென்டிகிரேட்.

 ஆர்.ராதிகா,
விக்கிரமசிங்கபுரம்.