ரோபோ சிறுத்தை!



நான்கு கால்களையும் தூக்கிக் கொண்டு காற்றில் தாவிக் குதித்து ஓடும் சிறுத்தை, ஒரு பல்கலைக்கழக வளாகத்தில் திரிந்தால் எப்படி இருக்கும்? அமெரிக்காவின் மாசாசூசெட்ஸ் தொழில்நுட்பப் பல்கலைக்கழக மாணவர்களும் ஆசிரியர்களும் இணைந்து உருவாக்கியுள்ள இந்த ரோபோ சிறுத்தை, மணிக்கு 16 கி.மீ. வேகத்தில் ஓடும்.

பொதுவாகவே மெதுவாக இயங்கும் ரோபோக்கள் போலன்றி, இது வேகப் பாய்ச்சல் காட்டுகிறது. உள்ளரங்குகளில் மட்டுமே ரோபோக்கள் இயங்கிய காலம் இப்போது மாறி வருகிறது.