டியர் டாக்டர்



* நீரிழிவு நோயாளிகளுக்கு சிறந்த வழிகாட்டி போல பயனுள்ளதாய் இருந்தது செப்டம்பர் 16 - 30 இதழ்.
- தேவநாதன், காரைக்குடி.

* மசாலா உணவுப்பொருட்களில் சேர்மானமாக சேர்க்கப்படும் அன்னாசிப்பூவுக்கு இத்தனை மகிமையா என்று வியந்து போனேன்.
- பாபு, சங்கராபுரம்.

* சரியான விழிப்புணர்வு ஏற்படுத்தியிருந்தது பிரியாணி பற்றிய கட்டுரை. ஆரோக்கியமான வழியில் எப்படி தயார் செய்வது? எந்த முறையில் சாப்பிடுவது நல்லது என்று விரிவான விளக்கம் சொல்லியிருந்தார் உணவியல் நிபுணர். ‘பிரியாணியால் எத்தனை பிரச்னை?’ என்ற தலைப்பு சமகால நாட்டு நடப்பை நினைத்து சிரிக்க வைத்ததையும் முக்கியமாக சொல்லியாக வேண்டும்.
- இரா.வளையாபதி, தோட்டக்குறிச்சி.   

* ஒரு கல்கண்டின் எந்தப் பகுதியைக் கடித்தாலும் இனிக்கும் என்பது போல, குங்குமம் டாக்டரின் அத்தனை தகவல்களும் மலர்ந்து மணம் பரப்புகிறது. இன்றைய காலகட்டத்துக்கேற்ற மிகவும் அவசியமான இதழ் என்று சொன்னாலும் மிகையில்லை!
- சு.இலக்குமணசுவாமி, மதுரை.

* ‘Medical Trends’ - புதிய பகுதி வாரே வா! சிம்பிளான செய்திகள்... அழகான படங்கள் என பிரமாதம். வாசிக்க வைக்க வேண்டும் என்பதற்காக வெறும் பொழுதுபோக்கு செய்தியாக இல்லாமல் விஷயம் நிறைந்த செய்திகளாகவும் இருந்தது பலே!
- சிம்மவாஹினி, வியாசர் நகர்.

* வேலை நெருக்கடி காரணமாகவோ, சோர்வு காரணமாகவோ உடற்பயிற்சி செய்யாமல் விடுகிறீர்களா? கவலை இல்லை... Weekend workout செய்தால் போதும் என்ற உங்கள் கட்டுரை நெஞ்சில் பால் வார்த்தது.

* உடற்பயிற்சி செய்யவில்லையே என்ற குற்ற உணர்ச்சியை நீக்கி, நம்பிக்கையையும் அளித்தது.
- கோபி, பழநி

* இ-சிகரெட்டுக்குத் தடை விதித்தால் போதுமா? என்ற கேள்வியில் தொடங்கும் கட்டுரை சமூக அக்கறை வாய்ந்தது. 30 நாடுகளில் தடைசெய்யப்பட்ட இ.சிகரெட் போலவே புகையிலைக்கும் ஒட்டுமொத்தமாகத் தடைவிதிக்கச் சொல்லி இருந்தவிதம் சரியானது.
- கண்மணி, சேலம்