அதுக்கும் வந்தாச்சு ஆப்...



Play Store

ஆச்சரியம்... ஆனால் உண்மை என்பதைப் போல ஒருவருடைய மனதில் என்ன இருக்கிறது என்பதைக் கண்டுபிடிக்கவும் App வந்துவிட்டது. இதற்குப் பெயரே Moodies app என்று பெயர் சூட்டியிருக்கிறது Beyond Verbal என்கிற இஸ்ரேல் நிறுவனம்.
எப்படி?

 இந்த Moodies app செயலியை அதற்குரிய இணையதள பக்கங்களில் இருந்து கணினி, டேப்லெட் போன்றவற்றில் பதிவிறக்கம் செய்து கொள்ள வேண்டும். கணினி, டேப்லெட் போன்றவற்றில் மைக்ரோபோன் வசதியை அனுமதித்து பயன்படுத்துமாறு செய்ய வேண்டும். பின்னர் அந்த செயலியை இயக்கி, அதன்முன் 20 நொடிகள் வரை உங்களுடைய மனதில் உள்ள எண்ணங்களைப் பேசி அந்த குரலை பதிவு செய்ய வேண்டும்.

இந்த செயலியில் உள்ள மென்பொருள், நாம் பேசிய வார்த்தைகளின் குரல் ஏற்றத்தாழ்வுகளை ஆய்வு செய்து அதன் மூலம் நமது மனநிலை எப்படி உள்ளதென்பதை வெளிப்படுத்திவிடும். அது நாம் பேசிய வார்த்தைகளின் அர்த்தங்களை ஆராய்வதில்லை. ஆனால், நாம் பேசியிருக்கும் தொனியிலிருந்து நம் மனநிலை அமைதி, சந்தோஷம், துக்கம், கோபம் அல்லது நகைச்சுவை போன்ற எந்த உணர்வோடு உள்ளதென்பதை வெளிப்படுத்துகிறது.

இது தனிநபர்களின் உணர்வுகளை அவர்களுடைய குரலை அடிப்படையாகக் கொண்டு அளவிட்டு, அவர்களின் மனநிலையை வெளிப்படுத்துகிறது.
இந்தத் தொழில்நுட்பத்தின் நிறுவனர் யோரம் லெவனான் இயற்பியல், கணிதம் மற்றும் புள்ளியியல் போன்ற துறைகளில் பட்டங்களைப் பெற்றுள்ளார். வார்ட்டன் பல்கலைக்கழகத்தின் மூத்த ஆய்வாளராக உள்ளஇவர் தலைமையில் அறிவியல்விஞ்ஞானிகள் மற்றும் உளவியல் அறிஞர்கள் இணைந்து 18 ஆண்டுகள் மேற்கொண்ட ஆய்வுகளின் மூலம் இதை உருவாக்கியுள்ளனர்!

- கௌதம்