வேலை ரெடி!



வாய்ப்புகள்

வாய்ப்புகளுக்காகக் காத்திருக்கும் இளைஞர்களுக்கு வழிகாட்டும் பகுதி. இந்த இரண்டு வாரங்களில் வெளியான முக்கிய வேலைவாய்ப்பு அறிவிப்புகள் இங்கே...

இந்திய விமானப்படையில் ஏர்மேன் வேலை


நிறுவனம்: இந்தியன் ஏர்ஃபோர்ஸ் எனப்படும் இந்திய விமானப்படையில் வேலை
வேலை: ஏர்மேன்(நான்-டெக்னிக்கல்), ஆட்டோமொபைல் டெக்னீஷியன், ஐ.ஏ.ஏஃப் போலீஸ் மற்றும் ஐ.ஏ.ஏஃப் டிரேட் எனும் நான்கு பிரிவுகளில் வேலை
காலியிடங்கள்: குறிப்பிடப்படவில்லை
கல்வித் தகுதி: +2 தேர்ச்சி
வயது வரம்பு: 17.1.2000-லிருந்து 30.12.2003-க்குள் பிறந்தவர்கள்
தேர்வு முறை: உடற்தகுதி மற்றும் எழுத்துத் தேர்வு
விண்ணப்பிக்க கடைசித் தேதி: 21.1.2020
மேலதிக தகவல்களுக்கு: www.airmenselection.cdac.in

நபார்டு வங்கியில் உதவி மேலாளர் பணி

நிறுவனம்: நபார்டு வங்கி எனப்படும் மத்திய அரசின் விவசாய மற்றும் கிராம அபிவிருத்திக்கான வங்கியின் மும்பை கிளையில் வேலை
வேலை: நான்கு வெவ்வேறு துறைகளில் அசிஸ்டென்ட் மேனேஜர் (கிரேட் ‘ஏ’) வேலை
காலியிடங்கள்: மொத்தம் 154. இதில் கிராம அபிவிருத்திக்கான அசிஸ்டென்ட் மேனேஜர் துறையில் மட்டுமே அதிகபட்சமாக 139 காலியிடங்கள்
கல்வித் தகுதி: வேலைப் பிரிவுகளுக்கு ஏற்ப அந்தந்த துறைகளில் முதுகலைப் பட்டப்படிப்பு
வயது வரம்பு: 21 முதல் 30 வரை
தேர்வு முறை: எழுத்து மற்றும் நேர்முகம்
விண்ணப்பிக்க கடைசித் தேதி: 31.1.2020
மேலதிக தகவல்களுக்கு: www.nabard.org

காதி மற்றும் கிராமிய தொழில் நிறுவனத்தில் வேலை

நிறுவனம்: காதி அண்ட் வில்லேஜ் இண்டஸ்ட்ரிஸ் கமிஷன் எனும் மத்திய அரசின் காதி கிராமியத் தொழில் நிறுவனத்தில் வேலை
வேலை: குரூப் ‘பி’ மற்றும் ‘சி’ பதவியிலான வேலை.
காலியிடங்கள்: மொத்தம் 108. இதில் சீனியர் எக்சிகியூட்டிவ் 2, எக்சிகியூட்டிவ் 62, ஜூனியர் எக்சிகியூட்டிவ் 18 மற்றும் அசிஸ்டென்ட் 26 இடங்கள் காலியாக உள்ளது
கல்வித் தகுதி: டிகிரி, பி.ஜி. டிகிரி, டிப்ளமோ மற்றும் எஞ்சினியரிங் படிப்பு
வயது வரம்பு: குரூப் ‘பி’ வேலையான முதல் வேலைக்கு 30-க்குள்ளும் குரூப் ‘சி’ வேலையான மற்றைய வேலைகளுக்கு 27-க்குள்ளும் இருத்தல் வேண்டும்
தேர்வு முறை: எழுத்துத் தேர்வு
விண்ணப்பிக்க கடைசித் தேதி: 19.1.2020
மேலதிக தகவல்களுக்கு: www.kvic.org.in

ஜிப்மரில் நர்ஸிங் ஆஃபிசர் பணி!

நிறுவனம்: பாண்டிச்சேரியை தலைமையிடமாகக் கொண்டு இயங்கும் மத்திய அரசுக்கு சொந்தமான ஜவஹர்லால் இன்ஸ்டிடியூட் ஆஃப் போஸ்ட் கிராஜுவேட் மெடிக்கல் எஜுகேஷன் அண்ட் ரிசர்ச் எனும் மருத்துவக் கல்வி மற்றும் மருத்துவ ஆய்வுக்கான நிறுவனத்தில் வேலை
வேலை: நர்ஸிங் ஆஃபிசர், மெடிக்கல் லேபரட்டரி டெக்னீஷியன், ஸ்டெனோ உட்பட பல்வேறு துறைகளில் வேலை
காலியிடங்கள்: மொத்தம் 278. இதில் நர்ஸிங் ஆஃபிசர் வேலையில் 235 மற்றும் லேப் டெக்னீஷியன் வேலையில் 15 இடங்கள் அதிகபட்சமாக உள்ளன
கல்வித் தகுதி: நர்ஸிங் ஆஃபிசர் வேலைக்கு ஜெனரல் நர்ஸிங் படிப்பில் டிப்ளமோவும், லேப் டெக்னீஷியனுக்கு அதே பிரிவில் டிகிரியும் அவசியம்
வயது வரம்பு: நர்ஸிங் வேலைக்கு 18 முதல் 35 வரை
தேர்வு முறை: எழுத்து மற்றும் திறன் தேர்வுகள்
விண்ணப்பிக்க கடைசித் தேதி: 27.1.2020
மேலதிக தகவல்களுக்கு: www.jipmer.edu.in

+2 முடித்தவர்களுக்கு கடலோரக் காவல்படையில் வேலை

நிறுவனம்: மத்திய பாதுகாப்பு அமைச்சகத்தின் கீழ் செயல்படும் கடலோரக் காவல்படை
வேலை: நாவிக் (ஜெனரல் டியூடி) பிரிவில் வேலை
காலியிடங்கள்: மொத்தம் 260
கல்வித் தகுதி: +2-வில் கணிதம் மற்றும் இயற்பியல் பிரிவில் குறைந்தது 50% மதிப்பெண்களுடன் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
வயது வரம்பு: 18 முதல் 22 வயதுக்குள் இருக்கவேண்டும்
தேர்வு முறை: எழுத்துத் தேர்வு, உடல்தகுதி தேர்வு
விண்ணப்பிக்க கடைசித் தேதி: 2.2.2020
மேலதிக தகவல்களுக்கு:www.joinindiancoastguard.gov.in

தமிழ்நாடு வனக் காவல்படையில் வேலை

நிறுவனம்: தமிழ்நாடு ஃபாரஸ்ட் யூனிஃபார்ம் சர்வீசஸ் எனும் வனக் காவல்படையில் வேலை
வேலை: ஃபாரஸ்ட் கார்டு மற்றும் டிரைவிங் லைசென்சுடன் கூடிய ஃபாரஸ்ட் கார்டு எனும் இருபிரிவுகளில் வேலை
காலியிடங்கள்: மொத்தம் 320. இதில் முதல் பிரிவில் 227 மற்றும் மற்ற பிரிவில் 93 இடங்கள் காலியாக உள்ளது
கல்வித் தகுதி: +2 தேர்ச்சி
வயது வரம்பு: 21 முதல் 30 வரை
தேர்வு முறை: எழுத்து மற்றும் உடல் தகுதி
விண்ணப்பிக்க கடைசித் தேதி: 3.2.2020
மேலதிக தகவல்களுக்கு: www.forest.tn.gov.in

ரசாயனம் மற்றும் உரத் தயாரிப்பு நிறுவனத்தில் வேலை

நிறுவனம்: கேரளாவின் திருவாங்கூரில் உள்ள ரசாயனம் மற்றும் உர தயாரிப்பு நிறுவனம்
வேலை: சீனியர் மேனேஜர், அசிஸ்டென்ட் மேனேஜர், மேனேஜ்மென்ட் டிரய்னி, டெக்னீஷியன், அசிஸ்டென்ட், ஸ்டெனோகிராபர், கேண்டீன் சூப்பர்வைசர் உள்ளிட்ட பிரிவுகளில் உள்ளன.
காலியிடங்கள்: மொத்தம் 122
கல்வித் தகுதி: அந்தந்த பதவிகளுக்கேற்ப
வயது வரம்பு: பதவி வாரியாக மாறுபடுகிறது
தேர்வு முறை: சில பதவிகளுக்கு நேர்முகத்தேர்வு, சில பதவிகளுக்கு எழுத்துத் தேர்வு, நேர்முகத்தேர்வு
விண்ணப்பிக்க கடைசித் தேதி: 22.1.2020
மேலதிக தகவல்களுக்கு: http://fact.onlinereg.in/docs/Advertisement.pdf