அடடே... ஆங்கிலம் இவ்வளவு ஈசியா?Spot the Error-6

Many boys vs many a boy…

ரகுவின் அருகில் வந்து நின்ற ரவி, ‘‘சார், ஒருமை பன்மை பற்றி கொஞ்சம் சொல்லுங்களேன்’’ என்றான். உடனே ரகு, ‘‘அதாவது, Many boys என்றாலும் Many a boy என்றாலும் ஒன்றுதான். இரண்டும் பன்மைதான். ஆனால், ஒன்று பன்மை மாதிரியும் இன்னொன்று ஒருமை மாதிரியும் நமக்குத் தெரிகிறது. தெரிவது மட்டுமல்ல. அதை உபயோகப்படுத்தும் விதமும் அலாதியானது’’ என்று சொல்லிவிட்டு ரவியின் பக்கம் திரும்பினார் ரகு.

‘‘உதாரணமாக சொல்வதென்றால், ‘நிறைய ஆட்கள் வந்திருக்கிறார்கள்’ என்பதை ஆங்கிலத்தில் பொதுவாக Many men have come எனக் கூறுவோம். அதை Many a man has come என்றும் கூறலாம். இது ஒரு விதமான இலக்கியப் பிரயோகம். நடைமுறைப் பேச்சில் நாம் இதுபோன்று உபயோகப்படுத்துவதற்கான வாய்ப்புகள் அதிகம் அமைவதில்லை. எனினும் போட்டித் தேர்வுகளில் இந்த உபயோகம் அதிகம் கேட்கப்படுகின்றன.

1) Many a boy has done his duty. (Many boys have done their duty). 2) Many a time I have instructed you. (I have instructed you many times). 3) Many a soldier was killed in the war. (Many soldiers were killed in the war). 4) I have been there many a time. (Many times I have been there.). 5) Many a tale was told. (Many tales were told) இதைப் போலவே none, either, neither, each, every, every one, must be followed by a Verb in the Singular: 6) Either of the parent has come. 7) Neither of them was found guilty. 8) Each of these boys was intelligent. 9) Every man, woman and child was happy. 10) Every one of the answers is wrong. நம்மை அறியாமல் நாம் செய்யும் தவறு என்னவென்றால் every or every one, each or each one என்று வந்தாலே மனதளவில் நாம் அதைப் பன்மையாகக் கருதும் மனோபாவத்தை வளர்த்து வந்திருக்கிறோம். மாற்றிக்கொள்ள வேண்டிய தருளணம் இது.

a)None of the boys (was/were) there. b) Each of the boys have/has passed. c) Neither of the sisters is/are here. d) Every one of the pupils come / comes regularly. e) Each of them has/have to attend.’’ இந்த வாக்கியங்களில் subject verb agreement (SVA) சரியாக அமைந்திருக்கிறதா என பாருங்கள்’’ என்று சில வாக்கியங்களை எழுதிக் கொடுத்தார் ரகு

ஆங்கில வார்த்தை சந்தேகங்களுக்கு  தொடர்பு கொள்ள  englishsundar19@gmail.com

-(மீண்டும் பேசலாம்)
சேலம் ப சுந்தர்ராஜ்