வேலை ரெடி!*வாய்ப்புகள்

வாய்ப்புகளுக்காகக் காத்திருக்கும் இளைஞர்களுக்கு வழிகாட்டும் பகுதி. இந்த இரண்டு வாரங்களில் வெளியான முக்கிய வேலைவாய்ப்பு அறிவிப்புகள் இங்கே...

10ம் வகுப்பு தேர்ச்சி பெற்றோருக்கு ராணுவத்தில் வேலை!

நிறுவனம்: இந்திய ராணுவத்தின் துணை ராணுவப் பிரிவான அசாம் ரைஃபிள்ஸ்
வேலை: பல்வேறு பிரிவுகளில் வேலை
காலியிடங்கள்: மொத்தம் 79. இதில் அதிகபட்ச வேலை உள்ள பிரிவு ரைஃபிள்மேன் ஜெனரல் ட்யூட்டி. ஆண்/பெண் கலந்துகொள்ளும் இதில் மட்டுமே 29 இடங்கள் காலியாக உள்ளது
கல்வித் தகுதி: 10வது தேர்ச்சி
வயது வரம்பு: ஜெனரல் ட்யூட்டி வேலைப் பிரிவுக்கு 18 முதல் 23 வரை
தேர்வு முறை: உடல் தகுதி, உடல் திறன் மற்றும் மருத்துவத் தகுதிகள்
விண்ணப்பிக்க கடைசித் தேதி: 13.8.19
மேலதிக தகவல்களுக்கு: www.assamrifles.gov.in

மத்திய அரசின் இளைஞர் மேம்பாட்டு மையத்தில் வேலை

நிறுவனம்: நேரு யுவகேந்திரா சங்கதன் எனும் மத்திய அரசின் இளைஞர்களுக்கான மேம்பாட்டு மையத்தில் வேலை
வேலை: டிஸ்ட்ரிக்ட் யூத் கோவார்டினேட்டர், ஜூனியர் கம்ப்யூட்டர் ப்ரோகிராமர் உட்பட 10 பிரிவுகளில் வேலை
காலியிடங்கள்: மொத்தம் 337
கல்வித் தகுதி: 10வது, +2, டிகிரி, பி.காம்., பி.இ., பி.டெக்., எம்.சி.ஏ., லைப்ரரி சயின்ஸ், முதுகலைப் படிப்புகளில் ஏதாவது ஒன்றில் தேர்ச்சி பெற்றிருப்பவர்கள் இந்த வேலைகளில் ஒன்றுக்கு விண்ணப்பிக்கலாம்
வயது வரம்பு: சில வேலைகளுக்கு 18 முதல் 28 வரையும் சில வேலைகளுக்கு 18 முதல் 25 வயது வரைக்கும் விண்ணப்பிக்கலாம்
தேர்வு முறை: எழுத்து மற்றும் நேர்முகம்
விண்ணப்பிக்க கடைசித் தேதி: 7.8.19
மேலதிக தகவல்களுக்கு: www.nyks.nic.in


கப்பற்படைத் தளத்தில் டிரைவர் வேலை

நிறுவனம்: ஈஸ்டர்ன் நேவல் கமாண்ட் எனப்படும் விசாகப்பட்டினத்தில் உள்ள கப்பல்கட்டும் தளத்தில் வேலை
வேலை: டிரைவர் வேலை
காலியிடங்கள்:மொத்தம் 104. சமூகப் பிரிவுக்கு ஏற்ப காலியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளது
கல்வித் தகுதி: 10வது தேர்ச்சி
மேலதிக தகுதி: கனரக வாகனங்கள் மற்றும் மோட்டார் சைக்கிள் ஓட்டுவதற்கான லைசென்ஸ். இத்துடன் டிரைவர் அனுபவம்
வயது வரம்பு: 18 முதல் 25 வரை
தேர்வு முறை: எழுத்துத் தேர்வு
விண்ணப்பிக்க கடைசித் தேதி: 10.8.19
மேலதிக தகவல்களுக்கு: www.indiannavy.nic.in


SBI வங்கியில் கிரெடிட் அனாலிசிஸ்ட் பணி!

நிறுவனம்: பொதுத்துறை வங்கிகளில் ஒன்றான ஸ்டேட் பாங்க் ஆஃப் இந்தியா
வேலை: டெப்யூட்டி ஜெனரல் மேனேஜர்,
எஸ்.எம்.இ., கிரெடிட் அனாலிசிஸ்ட் மற்றும்
கிரெடிட் அனாலிசிஸ்ட் எனும் 3 பிரிவுகளில் வேலை
காலியிடங்கள்: மொத்தம் 77. இதில் முதல் பிரிவில் 2, இரண்டாம் பிரிவில் 25 மற்றும் மூன்றாம் பிரிவில் 50 இடங்கள் காலியாக உள்ளது
கல்வித் தகுதி: சி.ஏ., எம்.பி.ஏ., டிகிரி, பி.ஜி.டி.எம்., பி.இ., பி.டெக்., படித்தவர்கள் இந்த வேலைகளுக்கு விண்ணப்பிக்கலாம்
வயது வரம்பு: 23 முதல் 45 வரை
தேர்வு முறை: நேர்முகம்
விண்ணப்பிக்க கடைசித் தேதி: 12.8.19
மேலதிக தகவல்களுக்கு: www.sbi.co.in


விளையாட்டு வீரர்களுக்கு துணை ராணுவத்தில் வேலை!

நிறுவனம்: சசாஸ்திரசீமாபல் எனும் துணை ராணுவப்படை
வேலை: கான்ஸ்டபிள்(ஜி.டி). இது ஆண்கள், பெண்கள் இருபாலரும் கலந்துகொள்ளலாம். இந்த வேலைகள் விளையாட்டு வீரர்களுக்கான தேர்வு என்பதால் விளையாட்டுப் போட்டிகளில் கலந்துகொண்டிருப்பது கட்டாயம்
காலியிடங்கள்: மொத்தம் 150
கல்வித் தகுதி: 10வது தேர்ச்சி
வயது வரம்பு: 18 முதல் 23 வரை
தேர்சி முறை: விளையாட்டில் தேர்ச்சிக்கான சான்று மற்றும் மருத்துவ சோதனை
விண்ணப்பிக்க கடைசித் தேதி: 11.8.19
மேலதிக தகவல்களுக்கு:www.ssbrectt.gov.in


பிரசார் பாரதியில் அதிகாரி பணி!

நிறுவனம்: மத்திய அரசு நிறுவனமான பிரசார் பாரதி எனும் தொலைக்காட்சி ஒளிபரப்பு நிறுவனம்
வேலை: மேனேஜிங் எக்சிகியூட்டிவ் பதவியில்
4 பிரிவுகளில் வேலை
காலியிடங்கள்: மொத்தம் 60
கல்வித் தகுதி: எம்.பி.ஏ., முதுகலை, மார்க்கெட்டிங் டிப்ளமோ படிப்புடன் வேலை அனுபவமும் அவசியம்
வயது வரம்பு: 35-க்குள்
தேர்வு முறை: எழுத்து மற்றும் நேர்முகம்
விண்ணப்பிக்க கடைசித் தேதி: 6.8.19
மேலதிக தகவல்களுக்கு: www.prasarbharati.gov.in


எய்ம்ஸ் மருத்துவ ஆராய்ச்சி மையத்தில் வேலை!


நிறுவனம்: மருத்துவமனை மற்றும் மருத்துவ ஆராய்ச்சிக்கான மத்திய அரசு நிறுவனமான எய்ம்ஸ்-ன் டெல்லி கிளை
வேலை: ஜூனியர் ரெசிடெண்ட் எனும் ஆசிரியர் இல்லாத மருத்துவர் வேலை
காலியிடங்கள்: மொத்தம் 89. கம்யூனிட்டி மெடிசின், சைக்கியாட்டரி, சர்ஜரி எனப்
பல்வேறு மருத்துவப் பிரிவுகளில் வேலை
கல்வித் தகுதி: எம்.பி.பி.எஸ்
தேர்வு முறை: எழுத்து மற்றும் நேர்முகம்
விண்ணப்பிக்க கடைசித் தேதி: 3.8.19
மேலதிக தகவல்களுக்கு: https://www.aiims.edu/en.html


ஜாமியா மிலியா பல்கலைக்கழகத்தில் டீச்சிங் / நான்டீச்சிங் பணிகள்!


நிறுவனம்: ஜாமியா மிலியா இஸ்லாமியா
பல்கலைக்கழகம், டெல்லி
வேலை: டீச்சிங் மற்றும் நான்-டீச்சிங் வேலைகள்
காலியிடங்கள்: மொத்தம் 122. இதில் டீச்சிங் 47, நான் டீச்சிங் 75 இடங்கள் காலியாக உள்ளது
கல்வித் தகுதி: 10, +2, டிகிரி, டிப்ளமோ, பி.ஜி., மற்றும் பிஎச்.டி படித்தவர்கள் வேலைக்கு ஏற்ப விண்ணப்பிக்கலாம்
விண்ணப்பிக்க கடைசித் தேதி: 16.8.19
மேலதிக தகவல்களுக்கு: www.jmi.ac.in

தொகுப்பு: டி.ரஞ்சித்