இந்தியன் ஆயில் கழக நிறுவனத்தில் பயிற்சிப் பணி! 643 பேருக்கு வாய்ப்பு!



*வாய்ப்பு
*643 பேருக்கு வாய்ப்பு


இந்தியாவின் மிகப்பெரிய பொதுத்துறை நிறுவனங்களில் ஒன்று சுருக்கமாக ஐ.ஓ.சி.எல். (IOCL) எனப்படும் இந்தியன் ஆயில் கழக நிறுவனம். இதன் தெற்கு மண்டல கிளையில் டிரேடு மற்றும் டெக்னீஷியன்(Trade Apprentice & Technician Apprentice) பயிற்சிப் பணியிடங்களுக்கு விண்ணப்பம் கோரப்பட்டுள்ளது. இந்தியன் ஆயில் நிறுவனத்தில் 600-க்கும் மேற்பட்ட பயிற்சிப் பணியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. இதில் தெற்கு மண்டலத்தில் மட்டும் 413 பேர் தேர்வு செய்யப்பட உள்ளனர்.

தெற்கு மண்டலத்தில் தேர்வு செய்யப்பட உள்ள 413 பேரில் டிரேடு பயிற்சிப் பணிக்கு 353 இடங்களும், டெக்னீஷியன் பயிற்சிப் பணிக்கு 60 இடங்களும் உள்ளன. இந்தப் பயிற்சிப் பணியில் சேர விரும்புபவர்கள் பெற்றிருக்க வேண்டிய தகுதி விவரங்களைப் பார்ப்போம்...

கல்வித் தகுதி

டிப்ளமோ எஞ்சினியரிங் படித்தவர்கள் டெக்னீஷியன் பயிற்சிப் பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம். 10-ம் வகுப்பு தேர்ச்சியுடன் ஐ.டி.ஐ. படித்தவர்கள் டிரேடு பயிற்சிப் பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம்.

வயது வரம்பு

விண்ணப்பதாரர்கள் 31.7.2019-ம் தேதியில் 18 வயது நிரம்பியவராகவும், 24 வயதுக்கு உட்பட்டவர்களாகவும் இருக்க வேண்டும். எஸ்.சி., எஸ்.டி. மற்றும் ஓ.பி.சி. பிரிவினருக்கு அரசு விதிகளின்படி வயது வரம்பு தளர்வு அனுமதிக்கப்படுகிறது.

விண்ணப்பிக்கும் முறை

விருப்பமும், தகுதியும் உள்ளவர்கள் இணையதளம் வழியாக விண்ணப்பம் சமர்ப்பிக்க வேண்டும். டிரேடு அப்ரண்டிஸ் பணிக்கு விண்ணப்பிப்பவர்கள் www.apprenticeshipindia.org மற்றும் www.apprenticeship.gov.in இணையதளங்களிலும், டெக்னீஷியன் அப்ரண்டிஸ் பணிக்கு www.portal.mhrdnats.gov.in என்ற இணைய தளம் மூலமும் விண்ணப்பிக்க வேண்டும். ஆன்லைனில் விண்ணப்பிக்கும்போது சமீபத்தில் எடுக்கப்பட்ட புகைப்படம், கையொப்பம் மற்றும் கல்விச் சான்றிதழ் உள்ளிட்ட அனைத்து சான்றிதழ்களையும் ஸ்கேன் செய்து பதிவேற்றம் செய்ய வேண்டும். விண்ணப்பிக்க கடைசிநாள் 7.8.2019.

வடக்கு மண்டலம்

இதேபோல இந்தியன் ஆயில் நிறுவனத்தின் வடக்கு மண்டலத்தில் டிரேடு மற்றும் டெக்னீசியன் பயிற்சிப் பணிக்கு 230 பேர் தேர்வு செய்யப்பட உள்ளனர். ஐ.டி.ஐ. டிப்ளமோ எஞ்சினியரிங் படித்தவர்களுக்கு இந்தப் பயிற்சிப் பணியிடங்களில் வாய்ப்பு உள்ளது. விருப்பமுள்ளவர்கள், விரிவான விவரங்களை இணையதளத்தில் பார்த்துவிட்டு ஆகஸ்டு 8-ம் தேதிக்குள் விண்ணப்பம் சமர்ப்பிக்கலாம். மேலும் விரிவான விவரங்களை அறிய http://ioclrecruit.com என்ற இணையதளத்தைப் பார்க்கலாம்.