வேலை ரெடி!



*வாய்ப்புகள்

வாய்ப்புகளுக்காகக் காத்திருக்கும் இளைஞர்களுக்கு வழிகாட்டும் பகுதி. இந்த இரண்டு வாரங்களில் வெளியான முக்கிய வேலைவாய்ப்பு  அறிவிப்புகள் இங்கே...

* தமிழ்நாடு மாசுக் கட்டுப்பாட்டு வாரியத்தில் வேலை நிறுவனம்: தமிழ்நாடு மாசுக் கட்டுப்பாட்டு வாரியம்

வேலை: எஞ்சினியர், சயின்டிஸ்ட் உட்பட 4 பிரிவுகளில் வேலை

காலியிடங்கள்: மொத்தம் 224. இதில் அசிஸ்டென்ட் எஞ்சினியர் 73, என்வயரோன்மென்ட் எஞ்சினியர் 60, ஜூனியர் அசிஸ்டென்ட் 36 மற்றும் டைப்பிஸ்ட் 55 இடங்கள் காலியாக உள்ளன

கல்வித் தகுதி: முதல் வேலைக்கு பி.இ., பி.டெக்., இரண்டாவது வேலைக்கு எம்.எஸ்சி., மூன்றாவது வேலைக்கு டிகிரி, நான்காவது வேலைக்கு டிகிரி அல்லது டிப்ளமோ

வயது வரம்பு: 18 முதல் 30 வரை

தேர்வு முறை: எழுத்து மற்றும் நேர்முகத்தேர்வு

விண்ணப்பிக்க கடைசித் தேதி: 23.4.19

மேலதிக தகவல்களுக்கு: http://www.tnpcb.gov.in

* சிண்டிகேட் வங்கியில் மேலாளர் பணி

நிறுவனம்: பொதுத்துறை வங்கியான சிண்டிகேட் வங்கி

வேலை: மேலாளர் பதவியில் 4 துறைகளிலும் செக்யூரிட்டி ஆபிசர் வேலையும்

காலியிடங்கள்: மொத்தம் 129. இதில் மேனேஜர்(ரிஸ்க் மேனேஜ்மென்ட்) 50, மேனேஜர்(சட்டம்) 41, செக்யூரிட்டி ஆபிசர் 30, சீனியர் மேனேஜர் (ரிஸ்க் மேனேஜ்மென்ட்) 5 மற்றும் மேனேஜர்(ஆடிட்) 3 இடங்கள் காலியாக உள்ளது

கல்வித் தகுதி: முதல் வேலைக்கும் சீனியர் மேனேஜர் வேலைக்கும் கணிதம், புள்ளியியல், எம்.பி.ஏ, ஃபினான்ஸ், பேங்கிங் படிப்பில் டிகிரி, சட்டத்துறை மேனேஜருக்கு சட்டப்படிப்பில் டிகிரி, செக்யூரிட்டி ஆபிசர் வேலைக்கு இந்திய ராணுவத்தில் வேலை செய்த அனுபவம், ஆடிட் மேனேஜர் வேலைக்கு டிகிரி முடித்திருக்கவேண்டும்

வயது வரம்பு: எல்லா வேலைகளுக்குமே குறைந்தபட்ச வயது 25. அதிகபட்ச வயது செக்யூரிட்டி ஆபிசர் வேலைக்கு மட்டும் 45 மற்றவற்றுக்கு 35 இடங்கள்

தேர்வு முறை: எழுத்து மற்றும் நேர்முகத்தேர்வு

விண்ணப்பிக்க கடைசித் தேதி: 18.4.19

மேலதிக தகவல்களுக்கு: www.syndicatebank.co.in

சென்னை உயர்நீதி மன்றத்தில் கிளர்க் வேலை

நிறுவனம்: மெட்ராஸ் ஹைகோர்ட்

வேலை: லா கிளர்க்

காலியிடங்கள்: மொத்தம் 68

கல்வித் தகுதி: சட்டப்படிப்பில் பட்டப்படிப்பு

வயது வரம்பு: 30-க்குள்

தேர்வு முறை: நேர்முகம்

விண்ணப்பிக்க கடைசித் தேதி: 22.4.19

மேலதிக தகவல்களுக்கு: http://www.hcmadras.tn.nic.in

இந்திய கப்பற்படையில் மெக்கானிக் வேலை

நிறுவனம்: இண்டியன் நேவி எனும் இந்திய கடற்படை

வேலை: இண்டியன் நேவி சிவிலியன் என்ட்ரன்ஸ் டெஸ்ட் எனும் நுழைவுத்தேர்வு மூலம் சார்ஜ்மென் வேலை வழங்கப்படுகிறது

காலியிடங்கள்: மொத்தம் 172. இதில் மெக்கானிக் 103 மற்றூம் அம்யூனிஷன் அண்ட் எக்ஸ்ப்ளோசிவ் 69 இடங்கள் காலியாக உள்ளன

கல்வித் தகுதி: டிப்ளமோ படிப்பு

வயது வரம்பு: 30-க்குள்

தேர்வு முறை: எழுத்துத் தேர்வு

விண்ணப்பிக்க கடைசித் தேதி: 28.4.19

மேலதிக தகவல்களுக்கு: www.indiannavy.nic.in

இந்திய புலனாய்வுத் துறையில் அதிகாரி பணி

நிறுவனம்: இன்டலிஜன்ஸ் பீரோ (ஐ.பி.) எனப்படும் இந்திய அரசின் புலனாய்வுத் துறையில் வேலை

வேலை: பல்வேறு துறைகளில் வேலைகள் குறிப்பிடப்பட்டிருந்தாலும் ஜூனியர் இன்டலிஜன்ஸ் ஆபிசர் எனும் இளநிலை புலனாய்வுத் துறை அதிகாரி வேலையில் மட்டுமே அதிகப்படியான காலியிடங்கள் உள்ளன

காலியிடங்கள்: மொத்தம் 318. இதில் ஜூனியர் இன்டலிஜன்ஸ் ஆபிசர் வேலையில் 167 இடங்கள் காலியாக உள்ளன

கல்வித் தகுதி: ஜூனியர் இன்டலிஜன்ஸ் ஆபிசர் வேலைக்கு அறிவியல் பாடங்களை எடுத்து +2 படித்திருப்பதுடன் ரேடியோ டெக்னீஷியன் மற்றும் எலக்ட்ரானிக்ஸ் அண்ட் கம்யூனிகேஷன் படிப்பில் 2 வருட படிப்புக்கான சான்றிதழ் பெற்றிருத்தல் வேண்டும்

வயது வரம்பு: 56-க்குள்

தேர்வு முறை: எழுத்து மற்றும் நேர்முகம்

விண்ணப்பிக்க கடைசித் தேதி: 24.4.19

மேலதிக தகவல்களுக்கு: https://mha.gov.in

தேசிய தொழில்நுட்ப கல்வி மையத்தில் பேராசிரியர் பணி

நிறுவனம்: என்.ஐ.டி. எனப்படும் தேசிய தொழில்நுட்ப கல்வி மையத்தின் ஒடிசா மாநிலம் ரூர்கேலா வளாகம்

வேலை: உதவிப் பேராசிரியர், இணை பேராசிரியர், பேராசிரியர் போன்ற பணியிடங்கள்

காலியிடங்கள்: மொத்தம் 177. எஞ்சினியரிங், ஆர்கிடெக்சர், சயின்ஸ், ஹியூமானிட்டிஸ் மற்றும் மேனேஜ்மென்ட் போன்ற பிரிவில் பணியிடங்கள் உள்ளன. மற்றொரு அறிவிப்பின்படி பின்னடைவுப் பணிக்கு 47 பேர் தேர்வு செய்யப்பட உள்ளனர்.

கல்வித் தகுதி: பி.இ., பி.டெக். படிப்புடன் முனைவர் பட்டம் பெற்றவர்கள், எம்.ஆர்க் படித்தவர்கள், இதர முதுநிலை படிப்புகளுடன், முனைவர் பட்டம் பெற்றவர்கள், எம்.பி.ஏ. படிப்புடன் மேனேஜ்மென்ட் படிப்பில் பிஎச்.டி. படித்தவர்கள் இந்தப் பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம்.

வயது வரம்பு: 60-க்குள் | தேர்வு முறை: நேர்முகத்தேர்வு

விண்ணப்பிக்க கடைசித் தேதி: 30.4.19 | மேலதிக தகவல்களுக்கு: www.nitrkl.ac.in

தொகுப்பு: டி.ரஞ்சித்