காப்புரிமைக்கு பதிவு செய்ய உதவும் ஸ்டார்ட் அப் திட்டம்!



*வழிகாட்டல்

இந்தியாவைப் பொறுத்தவரை நிறைய பேர் சிறு தொழில்முனைவோர்களாக உள்ளனர். ஆனாலும், சொந்தமாக தொழில் தொடங்க வேண்டுமென்று நினைப்பவர்கள் பெரிய முதலீடும், சிறந்த திட்டமும் இருந்தால்தான் அது சாத்தியமாகும் என்று எண்ணிக்கொண்டிருக்கிறார்கள். இதை மாற்றும் விதமாக தொழில்முனைவோரை ஊக்கப்படுத்தும் விதத்தில் இந்திய அரசு ‘ஸ்டார்ட் அப் இந்தியா’ திட்டத்தை அறிமுகப்படுத்தியது. இந்த ஸ்டார்ட் அப் இந்தியா திட்டம் குறித்து கடந்த இதழில் எஸ்.ஷ்யாம் சேகர் (Founder & CEO, Startup Xperts Business Consulting, Chennai) வழங்கிய சில தகவல்களைப் பார்த்தோம். அதன் தொடர்ச்சியை இனி பார்ப்போம்…

பெரும்பாலானவர்கள் அவர்களது ஐடியாக்களுக்கோ, கண்டுப்பிடிப்புகளுக்கோ, காப்புரிமை (patent)/அறிவுசார் சொத்துரிமை (Intellectual Property Rights) வாங்குவதில்லை. காப்புரிமை இல்லாததால், அவர்களின் கண்டுபிடிப்பு காப்புரிமை உள்ள வேறொருவருக்கு சொந்தமாகிவிடுகிறது. இதற்குக் காரணம், இந்தியாவில் ஒரு திட்டத்தை செயல்படுத்த எடுக்கும் கால அவகாசமும், பதிவு செய்வதற்கான பணத் தேவையும்தான். இதை சரி செய்யும் வகையில் அரசு, காப்புரிமை/அறிவுசார் சொத்துரிமையை 90 நாட்களுக்குள் கிடைக்க வழிசெய்யும் வேக செயல்பாட்டுத் திட்டத்தை விரைவில் அமல்படுத்த உள்ளது. இந்த ‘Intellectual Property Production Scheme’ -யின்படி காப்புரிமை தாக்கல் செய்வதற்கு 80% சலுகை வழங்கப்படுகிறது. வர்த்தகக் குறியீடு தாக்கல் செய்வதற்கு 50% சலுகை வழங்கப்படுகிறது.

இந்த சான்றிதழை வைத்து Department of Industrial policy and Promotion-ன் Inter ministrial Board-ல் விண்ணப்பிக்க வேண்டும். அவர்கள் அதனை மதிப்பீடு செய்து, ஸ்டார்ட் அப்ஸ் வரிச்சலுகைகள் போன்ற பயன்களைப் பெறுவதற்கான தகுதிச் சான்றிதழ் அளிப்பார்கள். அந்தச் சான்றிதழைக் கொண்டு தொழில்முனைவோர், ஸ்டார்ட் அப் இந்தியா அம்சங்களைப் பயன்படுத்திக்கொள்ளலாம்.

இந்தியாவில் பதிவு செய்து ஐந்து வருடம் ஆன, ஆண்டுக்கு 25 கோடிக்கு மிகாமல் விற்பனை விகிதம் காணும் நிறுவனமே, ஸ்டார்ட் அப் எனப்படும். அதேசமயம் ஆண்டுக்கு 25 கோடி வருமானம் காணாத, முன்னதாகவே தொழில் தொடங்கியவர்களும், இந்தத் திட்டத்தில் இணையலாம். ஜனநாயக நாடான இந்தியாவில் பலன்களை அடைய வேண்டுமானால், பொதுவான விதிமுறைகளைப் பின்பற்றித்தான் ஆகவேண்டும். திட்டங்கள் வலிமையாக இருந்தால்தான், அனைவரும் பயன்பெற முடியும். இந்த வழிமுறைகளை எளிதாக்கத்தான், முதலீடு செய்யக்கூடிய நிதியாளர்கள் பட்டியல் முதற்கொண்ட விவரங்களுடன், ஆன்லைனில் ஸ்டார்ட் அப் பதிவு செய்ய http://startupindia.gov.in/ எனும் இணையதளமும், மொபைல் ஆப்-ம் (app) உள்ளது.

இந்திய ஸ்டார்ட் அப் நிலவரம்

* 2016 - 2018 ஒரு புள்ளி விவர கணக்கின்படி 200,000 கோடிகள், ஸ்டார்ட் அப்களில் முதலீடு செய்யப்பட்டுள்ளது.
* 2016 - 2019, 15,000 மேற்பட்ட ஸ்டார்ட் அப்கள், Startup India திட்டத்தின் கீழ் அங்கீகரிக்கப்பட்டுள்ளது. இதில் 13,000 க்கும் மேற்பட்ட ஸ்டார்ட் அப்கள் கிட்டத்தட்ட 1.5 லட்சம் வேலை வாய்ப்புகளை உருவாக்கியுள்ளது.
* இந்த 45% ஸ்டார்ட் அப்களில் ஒன்றோ அல்லது அதற்கு மேலான நிறுவனத்தில் மட்டுமே பெண் நிறுவனர்கள் உள்ளனர்.
* அமெரிக்கா, இங்கிலாந்து நாடுகளுக்கு அடுத்தபடியாக, இந்தியா ஸ்டார்ட்
அப்ஸில் மூன்றாம் இடத்தில் உள்ளது.
* Nithi Ayog-ன் கீழ் உள்ள attal Innovation mission, மூலம் பள்ளி, கல்லூரிகளிலிருந்தே புதிய கண்டுபிடிப்பிற்கான எண்ணங்களை ஊக்குவிப்பதற்கு 500 Tinkering Labs உருவாக்கியுள்ளது.
* புதுமையான ஸ்டார்ட் அப் நிறுவனங்களுக்கு மூன்று வருடங்களுக்கு வரி விலக்கு அளிக்கப்படுகிறது.
* ஸ்டார்ட் அப்-ஐ பொருளாதார அடிப்படையில் ஊக்குவிப்பதற்காக Fund of Funds திட்டத்தின்படி 10,000 கோடி ரூபாய் SIDBI மூலம் ஸ்டார்ட் அப்களில் முதலீடு செய்வதற்கான திட்டம் அமல்படுத்தப்பட்டுள்ளது.

மார்ச் மாதத்தில் வெளியிடப்பட்ட இன்டர்நேஷனல் மானிடரி ஃபண்ட்-இன் அறிக்கைப்படி, BRICS நாடுகளில் இந்தியாவையும் சீனாவையும் ஒப்பிடுகையில் சீனா 6.3 சதவீதமும் இந்தியா 7.5 சதவீதமும் பொருளாதார வளர்ச்சி காண்கிறது. பிரேசில், ரஷ்யா மற்றும் சவுத் ஆப்ரிக்காவும் எதிர்மறை வளர்ச்சியைத்தான் காண்கின்றன. அதுமட்டுமின்றி, 1.3 பில்லியன் மக்கள்தொகை உள்ள இந்தியாவில், 63% மக்கள் இளைஞர்கள் ஆவர். இந்திய தொழில்முனைவோர்களின் சராசரி வயது 28 ஆகும். இதுவே, நம் நாட்டின் பொருளாதாரத்தின் வெற்றிக்கான அறிகுறியாகும்.

UN Ease of doing businessன்படி சுலபமாக தொழில் செய்யக்கூடிய உலக நாடுகளின் தரவரிசைப் பட்டியலில் இந்தியா 100க்கும் அதிகமான இடத்திலிருந்து
தற்போது ஆச்சர்யமூட்டும் வகையில் 77 ஆம் இடத்தை பிடித்துள்ளது. அதுவும், தமிழ்நாட்டில் சிறு மற்றும் நடுத்தர ஸ்டார்ட் அப் நிறுவனங்களில் கோயம்புத்தூர் முதலிடம் வகிக்கிறது. இன்று திருப்பூரில் மட்டும் ஏற்றுமதியின் நிலவரம் 30,000 கோடி ஆகும். அங்கு வருமான வரி சேகரிப்பு கணக்கு 700 கோடியாகும். இதற்கு அந்த இடத்தில் உள்ள மக்களின் ஆர்வம் மட்டுமே காரணம்.

இதேபோல், டெல்லி, மும்பை, பெங்களூரூ, சென்னை மற்றும் புனேவிலும் தொழில்முனைவோர்கள் எண்ணிக்கை அதிகம். சென்ற வருடத்தின் புள்ளிவிவரத்தின்படி இந்தியாவில் 5200க்கும் மேற்பட்ட தொழில்நுட்பம் சார்ந்த ஸ்டார்ட் அப்கள் உள்ளன. குஜராத், கர்நாடகா, தெலுங்கானா, ஆந்திரப்பிரதேசம், ராஜஸ்தான், ஒடிசா, கேரளா  மத்தியப்பிரதேசம் ஆகிய மாநிலங்களில் ஸ்டார்ட் அப்பிற்காக பல வகைகளிலும் ஆதரவு அளிக்கப்பட்டுவருகின்றன.

மத்திய அரசாங்கம் புதிய தொழில்நுட்பம் வளர்வதற்காக 3,400 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்துள்ளது. ஆரம்பகால ஸ்டார்ட் அப்களில் முதலீடு செய்பவர்களை மேலும் ஊக்குவிப்பதற்காக ஏஞ்சல் வரி (Angel Tax) விதிமுறைகள், மாற்றியமைக்கப்பட்டால்  மேலும் பல முதலீட்டாளர்கள் ஆரம்பகால ஸ்டார்ட் அப்களில் முதலீடு செய்வதற்கான வாய்ப்புகள் அதிகம் உள்ளது.

தொகுப்பு: திருவரசு